Newskadai.com
லைஃப் ஸ்டைல்

ஆவணி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறப்பு

Share this:

சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மண்டல பூஜை, மகரவிளக்கு பூஜை என அனைத்து பூஜைகளும் சிறப்பு பெற்றவை. அதுபோல ஒவ்வொரு தமிழ் மாதத்தின் முதல் 5 நாட்களிலும், விஷு, ஓணம் பண்டிகை நாட்களிலும், பங்குனி உத்திர திருவிழாவின் போதும் சபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டு பல்வித பூஜைகள், வழிபாடுகளும் நடத்தப்படும். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்வார்கள்.

Ayyappan வழக்கம்போல் இந்த ஆண்டும் ஆவணி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை ஞாயிறுக்கிழமை திறக்கப்பட்டது. மாலை 5 மணிக்கு தந்திரி கண்டரரு ராஜீவரு அவர்களின் முன்னிலையில் மேல் சாந்தி சுதீர் நம்பூதிரி நடையை திறந்து வைத்தார். இதை தொடர்ந்து சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறாது என்பதால் கோவில் நடை இரவு 7.30 மணிக்கு மூடப்பட்டது.

மறு நாளான இன்று அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம் , கணபதி ஹோமம், அபிஷேகம், உஷ பூஜை மற்றும் உச்ச பூஜைக்கு பின் காலை 10 மணிக்கு நடை மூடப்படும். மீண்டும் மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு 6.30 மணிக்கு தீபாராதனை நடைபெறும். இதைதொடர்ந்து இரவு 7.30 மணிக்கு நடை அடைக்கப்படும். ஆவணி மாத பூஜைகளை முன்னிட்டு ஆகஸ்டு 21-ந் தேதி வரை 5 நாட்கள் இந்த சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

Ayyappan

கொரோனா கட்டுப்பாடு விதிமுறைகளை கடைபிடிக்கும் வகையில், பக்தர்களுக்கு தரிசனத்திற்கான விதிக்கப்பட்ட தடையை நீட்டிக்கப்பட்டிருப்பதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால் சிறப்பு பூஜை வழிபாடுகளான படி பூஜை, நெய்யபிஷேகம், உதயாஸ்தமன பூஜை உட்பட சிறப்பு பூஜைகள் நடைபெறாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் கனமழை பெய்து வருவதால், கடந்த 8 ஆம் தேதி சபரிமலை ஐயப்பன் நீராடும் புனித நதியான பம்பை ஆற்றில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பக்தர்கள் கொரோனா கட்டுப்பாடு விதிமுறைகளை கடைபிடித்து அவரவர் வீட்டிலேயே சுவாமி அய்யப்பனை வழிபடுது உத்தமம்.


Share this:

Related posts

மக்களே உஷார்: இதுவும் கொரோனா அறிகுறிகள்தான்… மருத்துவர் விளக்கம்

MANIMARAN M

சிறுகதை : காளியான பெருமாள் – முனைவர்.ஆதன் குமார்

NEWSKADAI

சீனாவை கழட்டிவிட்ட ஐபோன் நிறுவனம்… சென்னையில் படுஜோராக தொடங்கியது தயாரிப்பு…!

NEWSKADAI

கொரோனாவிற்கு எதிராக போர் புரிய வரும் AZD-1222

NEWSKADAI

குழந்தை பேறு தரும் சஷ்டி விரதம்… எப்படி, எங்கு கடைபிடிக்க வேண்டும் தெரியுமா?

NEWSKADAI

திருப்பதி ஏழுமலையான் தரிசனத்திற்கு இன்று முதல் ஆன்லைன் புக்கிங்…

THAVAMANI NATARAJAN