Newskadai.com
இந்தியா

கேரள விமான விபத்து: மத்திய, மாநில அரசுகள் இழப்பீடு அறிவிப்பு…!!

Share this:

கேரளா கோழிக்கோடு விமான நிலையித்தில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தரையிறங்குகையில் விபத்துக்குள்ளானது. துபாயிலிருந்து வந்தே பாரத் திட்டத்தின் மூலம் மொத்தம் 191 பயணிகளை தாயகம் அழைத்து வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், கோழிக்கோடு விமான நிலையத்தில் தரையிறங்கும் போது கனமழையால் சறுக்கி விபத்துக்குள்ளானதில் சுமார் 35 அடி ஆழத்தில் விழுந்து இரண்டு துண்டாக உடைந்தது.

Kerala

இந்த விபத்தில் விமானிகள் ராஜீவ், சர்புதீன் உட்பட 20 பயணிகள் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து விபத்து நடந்த இடத்திற்கு வந்த மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி ஆய்வு மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ.10 லட்சமும், படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ. 2 லட்சம், சிறு காயம் அடைந்தவர்களுக்கு ரூ. 50 ஆயிரம் நிவாரணமாக வழங்கப்படும் என அறிவித்தார்.

Kerala

மாநில அரசு சார்பில் விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ. 10 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும் என்றும், காயமடைந்தவர்களின் மருத்துவ செலவை அரசே ஏற்கும் என்றும் முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.


Share this:

Related posts

ரயில்வேயில் தனியார் : 50 சதவீதம் நிரந்தர காலி பணியிடங்களை திரும்ப ஒப்படைக்க ரயில்வே வாரியம் உத்தரவு.

NEWSKADAI

ஐந்து நாளில் 3,076 கோடி…! பி.எம் கேர்ஸிடம் கணக்கு கேட்கும் ப.சிதம்பரம்..!!

THAVAMANI NATARAJAN

பயணிகளுடன் இரண்டு துண்டாக உடைந்து விழுந்த விமானம்… கருப்பு பெட்டி சிக்கியது…!!

THAVAMANI NATARAJAN

காத்தையே காசுக்கு வித்தவங்க!! ரயில மட்டும் விட்டுறுவோமா!! கூவி கூவி விற்கும் மத்திய அரசு…

THAVAMANI NATARAJAN

கொரோனா பீதி: கைவிடப்பட்ட முதியவர் சடலம்… கண்டுகொள்ளாத சுகாதாரத்துறை… இறுதியில் அரங்கேறிய அவலம்… வீடியோ…!!

MANIMARAN M

ரிசர்வ் வங்கியின் அடிமடியில் கைவைத்த மத்திய அரசு… வெளியானது அதிர்ச்சி தகவல்…!!

POONKUZHALI