Newskadai.com
இந்தியா

காஷ்மீர் முஸ்லிம்களுக்கு ஆதரவாக களத்தில் குதித்த இந்துக்கள்… மத்திய அரசுக்கு அதிரடி கோரிக்கை…!!

Share this:

பறிக்கப்பட்ட மாநில சிறப்பு அந்தஸ்தை திருப்பிக் கொடுங்கள் என்று புலம்பெயர் காஷ்மீர் பண்டிட்டுகள் மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர். நமக்கெல்லாம் லாக் டவுன், 144 தடை உத்தரவு என்பது எல்லாம் 2020 மார்ச் மாதத்திலிருந்து தான். ஆனால் காஷ்மீர் மக்களுக்கு 2019 ஆகஸ்டில் இருந்தே 144 தடை உத்தரவு தான்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் காஷ்மீர் மாநிலத்தின் மீது பல அதிரடி நடவடிக்கைகளை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு மேற்கொண்டது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கிய அரசியல் சாசன சட்டம் 370 ஆவது பிரிவை ரத்து செய்தது. மாநில சட்டசபையை கலைத்தது. அரசியல் தலைவர்கள் எம்எல்ஏக்கள் எம்பிக்கள் அனைவரையும் வீட்டு சிறையில் அடைத்தது.

காஷ்மீர் மாநிலத்தின் தொலைத் தொடர்பு வசதிகள் துண்டிக்கப்பட்டது. மீடியாக்கள் தடை செய்யப்பட்டன. 144 தடை உத்தரவு கடுமையாக பின்பற்றப்பட்டது. காஷ்மீரில் என்ன நடக்கிறது என்பது, மத்திய அரசை தவிர வேறு யாருக்கும் தெரியாத ரகசியமாகவே இருந்தது. ஜம்மு காஷ்மீர் மாநிலம் கலைக்கப்பட்டு ஜம்மு &காஷ்மீர், லடாக் என்ற இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது.

மத்திய அரசின் அதிரடி நடவடிக்கைகளால் முடங்கிப் போயிருந்த காஷ்மீர் மக்களின் வாழ்வாதாரத்தை கொரோனா (covid 19) லாக் டவுன்கள் மேலும் சீரழித்துள்ளன. தொடர்ந்து சரிவை சந்தித்து வரும் காஷ்மீர் மக்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கும் பொருட்டு புலம்பெயர் காஷ்மீர் பண்டிதர்களின் அமைப்பு மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதில், “ஜம்மு-காஷ்மீர் மக்கள் உங்கள் சொந்த மக்களாக இருந்தார்கள். யூனியன் பிரதேசங்கள் ஆக பிரிக்கப்பட்ட காஷ்மீரை பழையபடியே மாநிலமாக ஆக்குங்கள். பறிக்கப்பட்ட மாநில சிறப்பு அந்தஸ்தை திருப்பி வழங்கி எங்கள் மீதான உங்கள் அன்பை காட்டுங்கள். ஜம்மு காஷ்மீரில் 370வது பிரிவை மீண்டும் நிலைநாட்ட வேண்டும். பின்தங்கிய பிராந்தியங்களின் நலன்களை பாதுகாப்பதற்கும், சிறுபான்மையினரை பாதுகாப்பதற்கும், மாநிலத்தின் சில பகுதிகளில் ஏற்படும் சட்டம் ஒழுங்கு பிரச்சனையை கையாள்வதற்கும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்” என்று அந்த கோரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Share this:

Related posts

ரபேல்ல வச்சு ஒரு சேம்பல் காட்டுவோமா? சீனாவை எச்சரிக்கும் இந்திய ராணுவம்

THAVAMANI NATARAJAN

விடைபெற்றார் பிரணாப் முகர்ஜி… முழு ராணு மரியாதையுடன் உடல் தகனம்..!!

AMARA

செப்.30 வரை ஊரடங்கு நீட்டிப்பு… 4ம் கட்ட தளர்வுகளை அறிவித்தது மத்திய அரசு…!!

AMARA

புதிய கல்விக்கொள்கை 2020 : ஆகஸ்ட் 31 வரை கருத்து தெரிவிக்கலாம் – மத்திய அரசு

MANIMARAN M

காத்தையே காசுக்கு வித்தவங்க!! ரயில மட்டும் விட்டுறுவோமா!! கூவி கூவி விற்கும் மத்திய அரசு…

THAVAMANI NATARAJAN

இன்று முதல் ஜியோவின் அதிரடி ஆரம்பம்… 30 நாட்களுக்கு இலவசம்… வெறும் 399-ல் குறைவில்லாத டேட்டா…!!

AMARA