Newskadai.com
லைஃப் ஸ்டைல்

இதுதான் பாஸ் இந்தியா… இந்து கோவில் கட்ட இடம் கொடுத்த முஸ்லிம் குடும்பம்… நெகிழ்ச்சியான சம்பவம்…!!

Share this:

“வேற்றுமையில் ஒற்றுமை காணும் நாடு இந்தியா” என்பது உதாரணமாக பல சம்பவங்கள் தினந்தோறும் நம்மை கடந்து அரங்கேறி வருகின்றன. அதில் குறிப்பாக இந்து – முஸ்லிம் சகோதரத்துவம் குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று. பேரிடர் காலங்களில் மக்களை மசூதியில் தங்கவைப்பதில் ஆரம்பித்து, பெங்களூரு கலவரத்தின் போது கோவிலுக்கு பாதுகாப்பு அரணாக நின்றது வரை இஸ்லாமியர்களின் ஒற்றுமை உணர்வையும், சகோதரத்துவத்தையும் பறை சாற்றும் விஷயங்கள் ஏராளம்.

அப்படித்தான் கர்நாடக மாநிலம் சிவமோகாவில் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பது பழமொழி. அதனால் சிவமோகாவில் உள்ள டவுன் ஜோகா பகுதி இந்து மக்கள் அந்த ஊருக்கு கோவில் ஒன்றை கட்ட தீர்மானித்துள்ளனர். அதே பகுதியில் உள்ள மொய்தீன் தவக்கல் என்பவருக்கு சொந்தமான 875 சதுர அடி நிலத்தில் ஒரு கல்லை வைத்து பசப்பா என்பவரது மகன் உமேஷ், லட்சுமணா என்பவது மகன் கோவிந்தா, ராமண்ணா என்பவரது மகன் ரவிசந்திரா ஆகியோர் வழிபாடு நடத்தி வந்துள்ளனர்.

மழைக்காலங்களில் அங்கு வழிபாடு நடத்த முடியாமல் அவர்கள் தவித்துள்ளனர். இதனால் மொய்தீன் குடும்பத்தினர் அந்த இடத்தில் கோவில் கட்டிக்கொள்ளும் படி, அந்த நிலத்தை அவர்களிடமே ஒப்படைத்துள்ளனர். மொய்தீனின் மகன்கள் ஹசன், காதர் மற்றும் பேரன்களான கரீம், ரபீக் ஆகியோரது ஒப்புதலுடன் நிலத்தை இந்து கோவில் கட்ட ஒப்படைத்துள்ளனர். இந்து கோவில் கட்டுவதற்காக முஸ்லிம் குடும்பம் நிலம் கொடுத்த சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Share this:

Related posts

பேச்சில் நேர்மை இருந்தால்… அனைத்தும் வெற்றியடையும்…!!

THAVAMANI NATARAJAN

கார்மேக வண்ணா… எங்கள் கண்ணா… ஓடி வா கிருஷ்ணா… உலகமே உன் கோகுலம்!

THAVAMANI NATARAJAN

16 கி.மீ. தனியே காடு, மலை கடக்கும் ஆசிரியை… பழங்குடி மாணவர்களின் கல்விக்காக உயிரை பணயம் வைக்கும் பயணம்…!

MANIMARAN M

கவலைகள் யாவும் தீரும்… இன்று பெருமாள் வழிபாடு நன்மைகளை தரும்..!!

THAVAMANI NATARAJAN

அப்பாவிடம் பணத்தை ‘அபகரிக்க’ திட்டம்… 13 வயது மகன் போட்ட பகீர் ‘ஸ்கெட்ச்’… திடுக்கிட வைக்கும் தகவல்கள்…!

THAVAMANI NATARAJAN

மக்களே உஷார்: இதுவும் கொரோனா அறிகுறிகள்தான்… மருத்துவர் விளக்கம்

MANIMARAN M