Newskadai.com
தமிழ்நாடு

காவிரியில் கரை புரண்டு ஓடும் வெள்ளம்… கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுப்பு…!!

Share this:

கர்நாடகா மாநிலத்தில் தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளதால், காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் கிருஷ்ண ராஜ சாகர், கபினி, நுகு உட்பட மூன்று அணைகளும் நிரம்பும் தருவாயில் இருப்பதால் வினாடிக்கு ஒரு லட்சத்து 23 ஆயிரம் கன அடி வீதம் நீர் திறக்கப்பட்டுள்ளது.

அதனால் காவிரியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மைசூரை ஒட்டிய விவசாய நிலங்கள் மற்றும் வீடுகள் நீரில் மூழ்கியுள்ளன.நேற்றைய நிலவரப்படி மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 45 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டிருந்த நிலையில், இன்று மேட்டூர் அணைக்கான நீர்வரத்து விநாடிக்கு 90 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 5 அடி உயர்ந்து, 75.83 அடியாக உள்ளது.

Mettur

இந்நிலையில் பாசனத்திற்காக வினாடிக்கு 1000 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. அணையின் நீர் இருப்பு 37.92 டிஎம்சியாக உள்ளது. ஒகேனக்கல்லில் அனைத்து அருவிகளிலும் நீரின் அளவு அதிகரிந்துள்ளதால் ஒகேனக்கல் மற்றும் காவிரி ஆற்றங்கறையோரம் வசிப்பவர்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


Share this:

Related posts

+2 பொதுத்தேர்வு குறித்து முக்கிய முடிவு… முதல்வருடன் அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று ஆலோசனை…!

NEWSKADAI

தமிழகத்தில் இ-பாஸ் முறை ரத்தா..? அரசின் முடிவு என்ன..?

MANIMARAN M

நகைப்பட்டறை தொழிலாளர்களுக்கு நல்ல செய்தி… மனம் குளிரவைத்த கோவை மாநகராட்சி…!

NEWSKADAI

எல்லா பணமும் கொரோனா சிகிச்சைக்கு தான்… முதல்வர் மு.க.ஸ்டாலினின் அடுத்த அதிரடி…!

NEWSKADAI

போலீஸ் மீது வெடிகுண்டு வீச்சு… பிரபல ரவுடி என்கவுன்டர்… பதட்டத்தில் தூத்துக்குடி…

MANIMARAN M

கொரோனா பீதி: கோவையை விட்டு கூட்டம், கூட்டமாக வெளியேறும் மக்கள்… திணறும் போலீசார்…!

NEWSKADAI