Newskadai.com
அரசியல் இந்தியா

பாஜகவினருக்கு அடுத்த அதிர்ச்சி… கர்நாடகா முதல்வர் எடியூரப்பாவிற்கு கொரோனா… மகளையும் விட்டு வைக்காத சோகம்…!!

Share this:

இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்றுக்கு முன் களப்பணியாளர்களான மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர், தூய்மை பணியாளர்கள், சுகாதாரத்துறை ஊழியர்கள் மட்டுமின்றி, எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், அமைச்சர்கள், ஆளுநர் ஆகியோரையும் கொரோனா தொற்று விட்டு வைக்கவில்லை. நேற்று உத்திரப்பிரதேச மாநில தொழில்நுட்ப கல்வித்துறை அமைச்சரான கமல் ராணி (62) கொரோனா தொற்றால் காலமானார். இந்த அதிர்ச்சியில் இருந்து பாஜகவினர் மீள்வதற்குள் உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அமித் ஷா சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள அமித் ஷா, ஆரம்ப கட்ட கொரோனா அறிகுறிகள் தென்பட்டதாகவும், அதையடுத்து மேற்கொண்ட பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

தற்போது வரை தனது உடல் நலம் நன்றாக இருப்பதாகவும், இருப்பினும் மருத்துவர்களின் அறிவுரையின் படி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த அவர், கடந்த சில நாட்களாக யாரெல்லாம் வந்து தன்னை சந்தித்தார்களோ அவர்கள் அனைவரும் தன்னைத் தானே தனிமைப்படுத்திக்கொள்ளும் படியும், கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் படியும் அறிவுறுத்தினார்.

 

இதையடுத்து அமித் ஷா கொரோனா தொற்றிலிருந்து நல்ல படியாக மீண்டு வர வேண்டுமென அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். நாடு முழுவதும் அமித் ஷா நலம் பெற வேண்டி பாஜகவினர் கடவுளிடம் பிரார்த்தித்து வருகின்றனர். இந்நிலையில் கர்நாடகா முதலமைச்சர் எடியூரப்பாவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் தீயாய் பரவி வரும் கொரோனா தொற்றைக் கட்டுபடுத்துவதற்காக எடியூரப்பா(77) பல ஆலோசனை கூட்டங்களை நடத்தி வந்தார். இந்நிலையில் அவரது அலுவலக ஊழியர்கள் சிலருக்கு தொற்று உறுதி செய்யப்படதை தொடர்ந்து கடந்த 5 நாட்களாக எடியூரப்பா தன்னை தானே தனிமைப்படுத்திக் கொண்டார். இதையடுத்து நேற்று மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், தனக்கு அறிகுறி இல்லாமல் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், மருத்துவர்களின் அறிவுரையின் படி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் எடியூரப்பா பதிவிட்டுள்ளார். மேலும் கடந்த சில நாட்களாக தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு, கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் படி அறிவுறுத்தியுள்ளார்.

Yediyurappa

பாஜக ஆளும் மாநிலங்களிலேயே அதிக வயதுடைய மூத்த முதலமைச்சரான எடியூரப்பாவிற்கு மட்டுமின்றி, அவருடைய மகளுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து பெங்களூருவில் உள்ள மணிபால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 


Share this:

Related posts

கொரோனாவை வென்றார் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்… 80 வயதிலும் மன உறுதிக்கு கிடைத்த வெற்றி…!!

AMARA

மோடியின் ஈகோவிற்கான பரிசு… பிரதமரை கடுமையாக விமர்சித்த ராகுல் காந்தி…!

MANIMARAN M

கொரோனா நேரத்தில் இப்படியா?… காய்ச்சல், நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகள் பற்றி வெளியான அதிர்ச்சி தகவல்…!!

MANIMARAN M

பலத்த எதிர்ப்புகளுக்கிடையே தொடங்கின JEE தேர்வுகள்… குறைந்த மாணவர்களே பங்கேற்பு…

MANIMARAN M

அரசியல் வெற்றிடத்தை விஜயகாந்த் மட்டுமே நிரப்புவார் : தேமுதிக பொருளாளர் பிரேமலதா…

MANIMARAN M

“அது எல்லாம் முடிந்து போன விவகாரம்”… ஆர்.பி.உதயக்குமாரை அசிங்கப்படுத்திய எடப்பாடியார்…!!

MANIMARAN M