இம்மாத துவக்கத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வந்த கன மழையால் கர்நாடகத்தின் கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பியுள்ளது. கடந்த வாரம் மழைப்பொழிவு சற்று குறைந்து வருவதால் அணைகளுக்கு வரும் தண்ணீரின் அளவும் குறைந்துள்ளது. கபினி அணைக்கு நீர்வரத்து 3,265 கன அடியாகவும், அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு 2,265 கன அடியாகவும் உள்ளது, அதேபோல் கிருஷ்ணராஜசாகர் அணைக்கு நீர்வரத்து 4,219 கன அடியாகவும், அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு 2,407 கன அடியாகவும் உள்ளது.
கர்நாடகா அணைகளில் இருந்து தமிழகத்திற்கு நொடிக்கு 4,490 கன அடி தண்ணீர் திறந்து விடப்பப்பட்டுள்ளது. தமிழக எல்லையான பிலிக்குண்டுலுக்கு காவிரியில் நீர்வரத்து 9,100 கன அடியிலிருந்து 11,800 அடியாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 98.50 அடியாக இருக்கிறது, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 9,160 கன அடியாகவும் பாசனத்திற்க்காக வெளியேற்றப்படும் நீரின் அளவு 18,500 கன அடியாக உள்ளது,