Newskadai.com
அரசியல்

கொரோனாவுக்கு பலியானார் காங்கிரஸ் எம்.பி. எச்.வசந்தகுமார்… சோகத்தில் மூழ்கியது காங்கிரஸ்…!!

Vasanthakumar
Share this:

தமிழகத்தில் தீயாய் பரவி வரும் கொரோனா தொற்று மக்களை காப்பதற்காக களத்தில் இறங்கி போராடும் மருத்துவர்கள், செவிலியர்கள், போலீசார், தூய்மை பணியாளர்கள், மாவட்ட ஆட்சியர்கள், சுகாதாரத்துறை ஊழியர்கள் என பலரையும் தொற்றுக்கு ஆளாக்கி வருகிறது. இந்த கொடூர வைரஸின் கோரப்பிடியில் சிக்கி பலரும் உயிரிழந்து வருவது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. போதாக்குறைக்கு மக்களின் தேவைகளை கண்டறியவும், கள ஆய்விற்காகவும் பணியாற்றும் எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள், எம்.பி.க்கள் ஆகியோரும் தொற்றால் பாதிக்கப்படுவது தொடர்கதையாகி வருகிறது.

கன்னியாகுமரி தொகுதி எம்.பி.யான எச்.வசந்தகுமாருக்கு கொரோனா அறிகுறிகள் தென்பட்டதை தொடர்ந்து கடந்த 10ம் தேதி சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், எச்.வசந்தகுமார் மனைவிக்கும் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு, அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு எச்.வசந்தகுமார் உடல் நிலை குறித்து தெரிவித்த காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் கே.எஸ்.அழகிரி வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருவதாகவும், விரைவில் பூரண நலம் பெற்று திரும்புவார் என்றும் கூறியிருந்தார். அவர் உயிர் காக்கும் கருவிகளுடன் சிகிச்சை பெறுவது காங்கிரஸ் கட்சி தொண்டர்களை கலக்கத்தில் ஆழத்தியிருந்தது.

மேலும் கடந்த சில நாட்களாகவே வசந்தகுமாரின் உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.அதனை சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கரும் உறுதி செய்தார். இந்நிலையில் இன்று மாலை சரியாக 6.56 மணி அளவில் எச்.வசந்தகுமார் உயிர் பிரிந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால் அவரது குடும்பத்தினர், கட்சி தலைவர்கள், தொண்டர்கள் மற்றும் குமரி மக்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.


Share this:

Related posts

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி சொன்ன ஓபிஎஸ்..!

MANIMARAN M

ஜனநாயகம் காக்க உறுதியேற்போம்…! மு தமிமுன் அன்சாரி எம்எல்ஏ சுதந்திர தின வாழ்த்து செய்தி…

MANIMARAN M

“நீங்க எல்லாம் பாஜகவுடன் தொடர்பு வச்சிருக்கீங்க”… காங்கிரஸ் சீனியர் தலைவர்கள் சீண்டிய ராகுல் காந்தி…!!

AMARA

மகிழ்ச்சி செய்தி..! ஒவ்வொரு குழந்தைக்கும் ரூ.5 லட்சம் வழங்கப்படும்

AFRIN

“பாஜகவில் இணையவில்லை”… திமுக எம்.எல்.ஏ. கு.க.செல்வம் அதிரடி விளக்கம்…!

AMARA

தினசரி சாப்பாட்டு செலவு 25 கோடியா ?? முதல்வரிடம் கணக்கு கேட்கும் கம்யூனிஸ்ட்…

MANIMARAN M