தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கந்த சஷ்டி கவசம் அவதூறு விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. கடவுள் முருகனின் கந்த சஷ்டி கவசத்தை கொச்சையாகவும், அவதூறாகவும் சித்தரித்து கறுப்பர் கூட்டம் என்ற யூ-டியூப் சேனல் வீடியோ ஒன்றை வெளியிட்டது. இந்த விவகாரத்தை கையில் எடுத்த பாஜக உள்ளிட்ட இந்து அமைப்புகள் கறுப்பர் கூட்டம் யூ-டியூப் சேனலைச் சேர்ந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென பல்வேறு புகார்களை கொடுத்தனர்.
மேலும் படிக்க:http://லாக்டவுனில் இப்படி ஒரு காரியம் செய்தாரா தல அஜித்?… தாறுமாறு வைரலாகும் போட்டோவால் குஷியான ரசிகர்கள்…!!
இதையடுத்து அதிரடியாக களத்தில் இறங்கிய போலீசார், கறுப்பர் கூட்டம் யூ-டியூப் சேனலைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகளான செந்தில் வாசன், சுரேந்திரன் உள்ளிட்ட 4 பேரை கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து கறுப்பர் கூட்டம் யூ-டியூப் சேனலில் பதிவிடப்பட்டிருந்த 500க்கும் மேற்பட்ட வீடியோக்களை சைபர் கிரைம் போலீசார் நீக்கினர். தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் பாராட்டு தெரிவித்திருந்தார்.
மேலும் படிக்க: http://மத்திய அரசுடன் மல்லுகட்டும் எதிர்க்கட்சிகள்… EIA சட்டத்திற்கு எதிராக வலுக்கும் கண்டனங்கள்…!!
இதையடுத்து கறுப்பர் கூட்டம் யூ-டியூப் சேனலைச் சேர்ந்த சுரேந்திரன் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ் குமார் உத்தரவின் பேரில் எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கையால் சுரேந்திரன் ஓராண்டிற்கு வெளியில் வர முடியாதபடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.