Newskadai.com
சினிமா வீடியோ

கவலையில் எஸ்.பி.பி. குடும்பத்தினர்… கரம் பற்றி ஆறுதல் கூற மருத்துவமனை விரைந்த கமல்… வைரல் வீடியோ…!

Share this:

பிரபல பாடகரான எஸ்.பி.பாலசுப்ரமணியம் கடந்த ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி கொரோனா பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் வென்டிலேட்டர், எக்மோ கருவிகளுடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், திடீரென எஸ்.பி.பி.யின் உடல் நிலை மோசமடைந்தது. தனது குரலால் மக்களை மகிழ்வித்த இசை அரசன் எஸ்.பி.பி. பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டுமென ஆகஸ்ட் 20ம் தேதி அனைவரும் ஒன்றிணைந்து பிரார்த்தனை நடத்தினர்.

SPB

திரைத்துறையினர் மற்றும் லட்சக்கணக்கான ரசிகர்களின் தூய்மையான அன்பு மற்றும் பிரார்த்தனையால் எஸ்.பி.பி. இயல்பு நிலைக்கு திரும்ப ஆரம்பித்தார். தற்போது மயக்கத்தில் இருந்து முழுவதுமாக மீண்டுள்ள எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. மேலும் வென்டிலேட்டர் மற்றும் எக்மோ கருவிகளுடன் சிகிச்சை தொடர்வதாகவும், இயல்பான கூழ்ம உணவுகளை எஸ்.பி.பி. எடுத்துக்கொள்வதாகவும் கூறப்பட்டது. சமீபத்தில் எஸ்.பி.பி.சரண் வெளியிட்ட பதிவில் கூட அப்பா வீடு திரும்ப மிகவும் ஆர்வமாக காத்திருக்கிறார் என கூறியிருந்தார். இதனால் அவருடைய உடல் நிலை நல்ல முறையில் தேறிவிட்டதாக ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

இந்நிலையில் சற்றுநேரத்திற்கு முன்பு மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், கடந்த 24 மணி நேரத்தில் எஸ்.பி.பி.யின் உடல் நிலை மிகவும் மோசமடைந்துள்ளதாகவும், தற்போது உயிருக்கு ஆபத்தான கட்டத்தில் அவர் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதிகபட்ச உயிர் காக்கும் கருவிகளுடன் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், எம்.ஜி.எம். மருத்துவமனையின் சிறந்த மருத்துவர்கள் குழு அவரை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் கூறியுள்ளனர். எஸ்.பி.பி உடல்நிலை தேறிவிட்டார் என்ற மகிழ்ச்சியில் இருந்த ரசிகர்களும், திரையுலகினரும் தற்போது மீண்டும் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

எஸ்.பி.பி. மீண்டும் பூரண குணமடைந்து பழைய நிலைக்கு வருவார் என அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த நேரத்தில் மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கை, பலரது தலையிலும் கல்லைத் தூக்கி போட்டது போல் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இதனிடையே எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு நெருங்கிய நண்பரான உலக நாயகன் கமல் ஹாசன், அவர் சிகிச்சை பெற்று வரும் சூளைமேட்டில் உள்ள எம்ஜிஎம் ஹெல்த்கேர் சென்டருக்கு அவசர, அவசரமாக விரைந்தார். அங்கு சென்று எஸ்.பி.பி.யின் உடல் நிலை குறித்து மகன் எஸ்.பி.பி.சரணிடம் கமல் நேரில் நலம் விசாரித்துள்ளார். இதுதொடர்பான போட்டோ மற்றும் வீடியோக்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ…


Share this:

Related posts

எஸ்.பி.பி. உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்… சற்று நேரத்திற்கு முன்பு வெளியான பரபரப்பு அறிக்கை…!!

AMARA

“எஸ்.பி.பி. விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்”… ரஜினி வெளியிட்ட உருக்கமான வீடியோ…!

NEWSKADAI

நீங்க நினைச்சால் அப்பாவை மீட்டுக்கொண்டு வரலாம்… கண் கலங்கிய எஸ்.பி.பி.சரண்…!!

AMARA

கட்டுப்பாடு இல்லாத கண்டெய்னர் லாரி… டையருக்கு அடியில் சிக்கிய தம்பதி… தலை நசுங்கி பலியான கணவன்…!! ’பகீர்’ சிசிடிவி காட்சிகள்…

NEWSKADAI

200 நாட்களுக்கு பிறகு நாளை 15 ஆம் தேதி முதல் தியேட்டர்கள் திறப்பு..!!!

MANIMARAN M

கொலையா? தற்கொலையா?… சிபிஐ கைக்கு போன சுஷாந்த் மரண வழக்கு…!!

MANIMARAN M