Newskadai.com
சினிமா வீடியோ

கண்ணில் கனல் தெறிக்கும் கமல்… வெளியானது “பிக்பாஸ் சீசன் 4” ப்ரோமோ வீடியோ…!!

Kamal
Share this:

இந்தியில் 13 சீசன்களை கடந்த பிக்பாஸ் நிகழ்ச்சி, தமிழில் 3 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. காயத்ரி, ஜூலி, மகத், வனிதா, மீரா மிதுன் என சீசனுக்கு சீசன் சர்ச்சைகளை கிளப்ப ஒரு குரூப் இருந்து கொண்டு தான் இருந்தது. அதேபோல் சைடு கேப்பில் காதல் லீலைகளும் அரங்கேறின. பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்துவிட்டாலே குடும்பத்துடன் டி.வி. முன்னால் ஆஜராகும் அளவிற்கு பரபரப்பானதாக மாறிப்போனது.

Bigboss

சமீபத்தில் தெலுங்கில் பிரபல நடிகர் நாகார்ஜுனா தொகுத்து வழங்க உள்ள பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சிக்கான புரோமோ ஷூட் சமீபத்தில் நடைபெற்றது. அங்க ஆரம்பிச்சிட்டாங்க… இங்க இல்லையா? என தமிழ் ரசிகர்கள் ஆதங்கத்தில் கொந்தளித்தனர். இந்நிலையில் யாருமே எதிர்பார்க்காத வகையில் தமிழ் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சிக்கான ப்ரோமோ வீடியோவை வெளியிட்டு விஜய் தொலைக்காட்சி தனது ரசிகர்க்ளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது.

Kamal

இதற்கு முன்னதாக முரட்டு மீசை, தாடியில் கெத்தாக காட்சியளிக்கும் கமல் ஹாசனின் புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் வைரலானது. அந்த கெட்டப்பில் தான் கமல் ஹாசன் பிக்பாஸ் 4-யை தொகுத்து வழங்க போகிறாரா? என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். இந்நிலையில் அதே கெட்டப்பில் கமல் ஹாசன் இருக்கும் புரோமோ வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

அதில் கமல் ஹாசன் வழக்கமாக கண்ணில் கனல் தெறிக்கும் படி பேசியுள்ளார். எவ்வளவு நாளைக்கு தான் வேலைக்கு போகாமல் வீட்டிலேயே இருப்பது, அதனால் நம்மை நம்பி இருப்பவர்களும் வேலை இல்லாமல் உள்ளனர். உலக சுகாதார மையம் கூறியுள்ள வழிகளை கடைபிடித்து பாதுகாப்பாக இருப்போம். இதோ நான் வந்துட்டேன். அதே மாதிரி நீங்களும் வேலையை தொடங்குங்கள் நாமே முன்னேடுப்போம். இதோ நான் வந்துட்டேன். அதே மாதிரி நீங்களும் தொடங்குங்கள். நம்மை நம்பி இருப்பவர்களை வாழ வையுங்கள். நாமே முன்னெடுப்போம் ஒரு புதிய தொடக்கத்தை, புதிய எதார்த்தத்தை, புதிய வாழ்க்கையை… நாமே தீர்வு.. சரி வேலையை ஆரம்பிக்கலாமா? என அற்புதமாக பேசியுள்ளார். அந்த வீடியோ இதோ…

 


Share this:

Related posts

காதலியை கரம் பிடித்தார் “பாகுபலி” வில்லன் ராணா… வைரலாகும் திருமண புகைப்படங்கள்…!

AMARA

லாக்டவுனில் இப்படி ஒரு காரியம் செய்தாரா தல அஜித்?… தாறுமாறு வைரலாகும் போட்டோவால் குஷியான ரசிகர்கள்…!!

NEWSKADAI

கொரோனாவுக்கு பயந்ததெல்லாம் மலையேறிபோச்சு… குத்தாட்டம்… கும்மாளம்… வீடியோ

NEWSKADAI

விஜய் சேதுபதிக்கு வந்த பார்ட் 2 காய்ச்சல்… தயாரிப்பாளர் வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு…!!

THAVAMANI NATARAJAN

‘அய்யோ அப்பா’ நடிகர் நிதிஷ் வீரா உடலைப் பார்த்து கதறி அழுத மகள்கள்! மனதை உருக வைக்கும் வீடியோ..!!

POONKUZHALI

கொடூர நாகத்துடன் மல்லுகட்டும் பெண்… பகீர் கிளப்பும் திகில் வீடியோ…!

NEWSKADAI