Newskadai.com
உலகம்

வெரிகுட் நியூஸ்: சிங்கிள் டோஸில் குணமாகும் கொரோனா… வந்தாச்சு பவர்ஃபுல் தடுப்பூசி..!!

Share this:

உலக பெருந்தொற்று கொரோனாவிற்கு தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கும் நடவடிக்கைகளில் பல நாடுகளில் பரிசோதனை இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. ரஷ்யா Sputnik-V என்ற தடுப்பு மருந்தைக் கண்டுபிடித்து பொது மக்கள் பயன்பாட்டிற்கு அனுப்பவுள்ளதாக அறிவித்துள்ளது. இங்கிலாந்தில் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் கண்டுபிடித்துள்ள தடுப்பூசி இறுதிக்கட்ட பரிசோதனையில் உள்ள நிலையில், அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்ப்பார்க்க படுகிறது.

இந்நிலையில் அமெரிக்காவின் மருந்து தயாரிக்கும் நிறுவனமான ஜான்சன் & ஜான்சன் கொரோனா தடுப்பூசிக்கான இறுதிக்கட்ட பரிசோதனையை நேற்று தொடங்கியது. ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் கண்டுபிடித்துள்ள கொரோனா தடுப்பூசி விலங்கு மற்றும் மனித பரிசோதனைகள் இரண்டிலும் பக்க விளைவுகளின்றி நோய் எதிர்ப்பாற்றல் அதிகரித்துள்ளதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து அந்நிறுவன தலைமை விஞ்ஞானி டாக்டர் பால் ஸ்டோஃபெல்ஸ் கூறியதாவது, ஜான்சன் & ஜான்சனின் கொரோனா தடுப்பூசியின் இறுதி கட்ட பரிசோதனை தொடங்கியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா, தென் ஆப்ரிக்கா, அர்ஜென்டினா, பிரேசில், சில்லெ, கொலெம்பியா, மெக்சிகோ, பெரு போன்ற நாடுகளிலிருந்து சுமார் 60 ஆயிரம் தன்ஆர்வலர்களுக்கு செலுத்தபட்டு மூன்றாம் கட்ட பரிசோதனை மேற்கொள்ளப்பட இருக்கிறது. மேலும் இந்த தடுப்பூசி வெற்றியடையும் பட்சத்தில் விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் எனவும், மற்ற தடுப்பூசிகள் குறிப்பிட்ட வாரங்களுக்கு இடையே இரண்டு முறையாக செலுத்தப்பட வேண்டும் என்பதுபோல் அல்லாமல், ஜான்சன் & ஜான்சனின் தடுப்பூசி ஒரு முறை மட்டுமே செலுத்திக் கொண்டால் போதுமானது என்றும் கூறியுள்ளார். மூன்றாம் கட்ட பரிசோதனை முடிவடைந்து அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் இந்த தடுப்பூசி உற்பத்தியை தொடங்க ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் முடிவு செய்துள்ளது.


Share this:

Related posts

இந்தியாவுக்கு அனுப்பவே முடியாது – இங்கிலாந்து அரசு திட்டவட்டம்..!!

MANIMARAN M

ஸ்வீடனில் எதிரொலித்த தமிழக மாணவர்களின் கூக்குரல்… நீட் தேர்வுக்கு எதிராக முழங்கிய கிரேட்டா…!!

MANIMARAN M

கொரோனாவை வைத்து ட்ரம்ப் போட்ட அதிரடி திட்டம்… தேர்தலை தள்ளிவைக்க போட்ட மாஸ்டர் பிளான்…!!

MANIMARAN M

அமெரிக்க அதிபரின் மிரட்டலுக்கு பயந்த டிக் டாக் நிறுவனம்…!!!

MANIMARAN M

அமெரிக்காவுக்கே இந்த நிலையா?…. ஆன்லைன் கல்விக்காக ஓட்டல் வாசலில் தவம் கிடக்கும் சிறுவர்கள்…!!

THAVAMANI NATARAJAN

சிறையில் “கைதி” தற்கொலை… உடற்கூராய்வில் மருத்துவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி…!

THAVAMANI NATARAJAN