Newskadai.com
தமிழ்நாடு

மருத்துவர் மீது கொடூர தாக்குதல் நடத்திய செவிலியர்… ஜிப்மர் மருத்துவமனையில் வெடித்தது போராட்டம்…!!

Share this:

கடந்த ஆகஸ்ட் 31 இரவு ஜிப்மர் மருத்துவமனையின் கொரோனா வார்டில் பணியிலிருந்த மருத்துவர் அடேதன் குணசேகரன் கொரோனா உறுதி செய்யப்பட்ட நோயாளிக்கு சிகிச்சையளித்துக் கொண்டிருந்தார். அப்போது உதவிக்காக ஆண் செவிலியர் செந்திலை அழைத்துள்ளார். அவர் உதவிக்கு வர மறுக்கவே மருத்துவருக்கும் செவிலியருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் செவிலியர் செந்தில் மருத்துவரை தகாத வார்த்தைளால் பேசி தாக்கியுள்ளார். தாக்குதலுக்குள்ளான மருத்துவருடைய பிபிஇ கிட் மற்றும் உபகரணங்கள் பாதிப்புக்குள்ளாகின.

இருப்பினும் மருத்துவர் தனது கடமையைத் தொடர்ந்தார். இந்த சம்பவம் சக மருத்துவர்களுக்கு தெரியவந்ததையடுத்து கடந்த 2-ம் தேதி செவிலியரை பணி நீக்கக் கோரி அரை மணி நேரம் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மருத்துவர் தாக்கப்பட்டது குறித்து நடவடிக்கை எடுப்பதாக ஜிப்மர் நிர்வாகம் உறுதியளித்ததால் மருத்துவர்கள் கலைந்து சென்றனர். மருத்துவர் தாக்குதல் சம்பவத்திற்கு தங்களது எதிர்ப்பை தெரிவிக்க மருத்துவர்கள் நேற்று கறுப்பு பேட்ஜ் அணிந்து பணி செய்தனர்.

இன்றுவரை இந்த விவகாரம் தொடர்பாக நிர்வாகம் எந்தவொரு நடவடிக்கை எடுக்காத நிலையில் இன்று ஜிப்மர் மருத்துவமனை வளாகத்தில் மருத்துவர்கள் அமைதி பேரணியில் ஈடுபட்டனர். நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் கலந்துக் கொண்ட இப்பேரணியில் பங்கேற்ற மருத்துவர்கள் முக கவசம் அணிந்து, தனிமனித இடைவெளியை கடைபிடித்தனர். மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள் பணி பாதுகாப்பு, பணியிடத்தில் பாதுகாப்பு, பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வலியுறுத்தினார்கள்.


Share this:

Related posts

அடக்கொடுமையே !! கோவை மின் மயானத்தில் எரியூட்ட காத்திருக்கும் உடல்கள்… பகீர் வீடியோ…!

NEWSKADAI

நீட் தேர்வு அச்சம்: கோவையில் மாணவி தூக்கிட்டு தற்கொலை… முடிவின்றி தொடரும் சோகம்…!!

MANIMARAN M

எல்லா பணமும் கொரோனா சிகிச்சைக்கு தான்… முதல்வர் மு.க.ஸ்டாலினின் அடுத்த அதிரடி…!

NEWSKADAI

முஜே ஹிந்தி மாலும் நஹி ..! ஃப்ரூப் கரோ… எம்.பி.கனிமொழி ஆவேசம்..!

MANIMARAN M

தமிழக வேலை தமிழர்களுக்கே! களத்தில் இறங்கிய வேல்முருகன் ஆர்மி…

MANIMARAN M

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி சொன்ன ஓபிஎஸ்..!

MANIMARAN M