Newskadai.com
இந்தியா

மலிவு விலையில் 5ஜி ஸ்மார்ட்போன் – ஜியோ வாடிக்கையாளர்களுக்கு ஜாக்பாட்

Share this:

ஜியோ வாடிக்கையாளர்களுக்கு இம்மாதம் இன்பச்செய்தி வெளியாகலாம். அதாவது 5ஜி போன் மிகவும் குறைந்த விலைக்கு ஜியோ நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளது.

இந்தியாவில் குறைந்த விலையில் 5ஜி ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்ய திட்டமிட்டிருந்த முகேஷ் அம்பானி அதற்காக கடந்த ஆண்டு கூகுள் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டார். அதனை தொடர்ந்து 5ஜி ஸ்மார்ட் போன்கள் தயாரிக்கும் பணிகள் தீவிரமடைந்தன. அதேபோன்று கடந்த மார்ச் மாதம் ஜியோ நிறுவனம் ரிலீஸ் செய்யப்பட உள்ள ஜியோபுக் எனப்படும் லேப்டாப்பின் சில பிரதான அம்சங்களையும் ஜியோ நிறுவனம் வெளியிட்டது. ஜியோவின் இந்த லேப்டாப் கஸ்டம் ஆண்ட்ராய்டு பதிப்பில் இயங்கும் என்றும், இது குவால்காம் ஸ்னாப்டிராகன் 665 சிப்செட்டால் இயக்கப்படலாம் என்றும் தெரிய வந்தது.

mobile

http://இவ்வளவு குறைந்த விலையில் ப்ரோ மாடல் மொபைல் போனா? நம்பமுடியாத விலை

இந்த நிலையில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் 44 வது ஆண்டு பொதுக் கூட்டமானது இந்த ஜூன் மாதம் 24 ஆம் தேதி 2 மணிக்கு நடைபெற தொடங்குகிறது. 2021 ஆம் ஆண்டு நடைபெறும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் இந்த ஏஜிஎம் நிகழ்வின் போது 5ஜி சேவைகளின் தொடக்கம் குறித்தும் அறிவிக்கப்படலாம். ரிலையன்ஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி குறைந்த விலை நிர்ணயம் கொண்ட ஜியோ 5ஜி போனையும், அதனுடன் குறைந்த பட்ஜெட் கொண்ட லேப்டாப்(ஜியோபுக்)யும் அறிவிக்க உள்ளார். மேலும், இந்தியாவில் ஜியோவின் 5ஜி சேவை எப்போது அறிமுகமாகும் என்பதையும் முகேஷ் அம்பானி அறிவிக்கலாம்.

அதன்படி, வரவிருக்கும் ஜியோ 5 ஜி போன் நாட்டின் மிகவும் மலிவான 5 ஜி ஸ்மார்ட்போன்களில் ஒன்றாக இருக்கும் என்று கூறப்படுகிறது. ஏனெனில், முகேஷ் அம்பானி தனது ஜியோ 5ஜி ஸ்மார்ட்போனை இந்தியாவில் ரூ.2,500 க்கு கூட அறிமுகம் செய்யலாம். தற்பொழுது நாட்டின் மலிவான 5 ஜி ஸ்மார்ட்போனின் விலை ரூ.13,999 ஆக உள்ளது. அதற்கும் குறைவாக ஜியோ ஸ்மார்ட் போன் விற்பனைக்கு வந்தால் இந்தியாவில் 5ஜி சேவையில் ஒரு புரட்சியே ஏற்படலாம்.


Share this:

Related posts

நாய் கறிக்கு தடை : மாநில அரசு அதிரடி.

NEWSKADAI

கூட்டு பாலியலுக்கு உள்ளாக்கப்பட்டவர் சிறையில் அடைப்பு. சமூக ஆர்வலர்கள் கண்டனம்.

NEWSKADAI

தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகள்…!! மன் கி பாத்தில் தமிழக பெருமை பேசிய பிரதமர் மோடி..

MANIMARAN M

சீட்டுக்கட்டு போல் சரிந்து விழுந்த 5 மாடி கட்டிடம்… இடிபாடுகளில் சிக்கிய 200 பேர் கதி என்ன???

MANIMARAN M

கேரளாவில் அடுத்த அதிர்ச்சி… நிலச்சரிவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 22 ஆக அதிகரிப்பு…!!

THAVAMANI NATARAJAN

மாலை நேரத்தில் வந்த நல்ல செய்தி… இனி இ-பாஸ் தேவையில்லை… மத்திய அரசு அதிரடி…!!

NEWSKADAI