Newskadai.com
தமிழ்நாடு

கோவையில் கொரோனா பீதி… நகைக்கடை உரிமையாளர்கள் எடுத்த அதிரடி முடிவு…!!

jewellery
Share this:

தமிழக அரசு கொரோனா நோய் பரவலை தடுக்க பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது, ஆனாலும் தமிழகத்தில் சில மாவட்டங்களில் குறிப்பாக, சேலம், கோவை மாவட்டங்களில் நோய் பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த வாரத்தில் மத்திய அரசு வெளியிட்ட வழிகாட்டுதலின் படியும், தமிழக மக்களின் நலன் கருதியும் தமிழகத்தில் இன்று முதல் சில கட்டுபாடுகளுடன் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் இனி ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு கிடையாது, மாவட்டங்களுக்கிடையே மக்கள் பயணிக்க இ-பாஸ் நடைமுறை ரத்து, மாவட்டத்திற்குள்ளான பொது மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி என்று பல தளர்வுகளை அறிவித்தது மாநில அரசு.

இந்நிலையில் கோவை மாநகரில் கொரோனா பரவல் அதிரித்து வருவதைத் தொடர்ந்து நகைக் கடைகள் மூடப்படுவதாக நகைக் கடை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கோவையில் 15 ஆயிரத்தைக் கடந்துள்ள கொரோனா பாதிப்பின் அச்சத்தைத் தொடர்ந்து, மேலும் நோய் பரவாமல் இருக்கவும், கொரோனா தடுப்பு நடவடிக்கை பணியாளர்கள் சிரமங்களை குறைக்கவும் இன்று முதல் 7ஆம் தேதி வரை ஒரு வாரக் காலத்திற்கு கோவையில் உள்ள அனைத்து நகைக் கடைகள் மற்றும் நகைப் பட்டறைகளை மூட முடிவு செய்யப்பட்டுள்ளதாக நகை கடைகள் மற்றும் நகை பட்டறைகள் சங்கத்தினர் தெரிவித்தனர்.


Share this:

Related posts

கோவையில் வாடகை ஹெலிகாப்டர் சேவை… அரை மணி நேரத்திற்கு இவ்வளவு காசா?

THAVAMANI NATARAJAN

இரவோடு இரவாக வீட்டிற்குள் புகுந்த நண்பர்கள்… கிருஷ்ணகிரி ஆட்சியர் அலுவலகத்தில் குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்ற நபர்…!

THAVAMANI NATARAJAN

மாணவன் வாழ்க்கையில் விளையாடிய “பப்ஜி”… செல்போன் வாங்கித் தராததால் தற்கொலை…!!

THAVAMANI NATARAJAN

கொரோனா பெண் நோயாளி தற்கொலையா?… சென்னை முகாமில் பரபரப்பு…!!

THAVAMANI NATARAJAN

பவானிசாகர் அணையிலிருந்து பாசனத்திற்கான நீர் திறப்பு… மகிழ்ச்சி வெள்ளத்தில் விவசாயிகள்…!!

THAVAMANI NATARAJAN

15 வயது சிறுமிக்கு 2 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை… தலைமறைவான அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.வுக்கு வலைவீச்சு…!!

NEWSKADAI