Newskadai.com
சினிமா

‘சீறு’ பட பாடகர் திருமூர்த்தி உட்பட 12 பேருக்கு தொற்று… ஊத்தங்கரையை உலுக்கி எடுக்கும் ‘கொரோனா’…!

Share this:

தமிழகத்தில் கொரோனா தொற்று தற்போது நகரங்களை விடவும் கிராமங்களில் தீயாய் பரவி வருகிறது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தொற்றுக்கு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பலரும் பாதிக்கப்படுவது அதிகரித்து வருகிறது. அரசு வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளை விதித்தாலும், குடும்ப நிகழ்ச்சிகள் மற்றும் துக்க நிகழ்ச்சிகளில் பங்கேற்பவர்களுக்கு தொற்று ஏற்படுவதாக கூறப்படுகிறது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தைப் பொறுத்தவரை நேற்றைய நிலவரப்படி நிலவரப்படி ஒரே நாளில் 70 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, அதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,257 ஆக அதிகரித்துள்ளது. நேற்று உயிரிழந்த ஒருவர் உட்பட இதுவரை 57 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் ஜீவாவின் சீறு படத்தில் செவ்வந்தியே மதுவந்தியே பட பாடலை பாடியிருந்த பார்வையற்ற இளைஞரான திருமூர்த்திக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பிறவிலேயே பார்வை இழந்த அவரின் குரல் வளத்தால் ஈர்க்கப்பட்ட இசையமைப்பாளர் இமான் அவரை தனது “சீறு” படத்தின் மூலமாக பாடகராக அறிமுகம் செய்து வைத்தார். திருமூர்த்தி குரலில் வெளியான செவ்வந்தியே மதுவந்தியே பாடலும் வெளியாகி ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றது. ஊத்தங்கரை அருகேயுள்ள நொச்சிப்பட்டி கிராமம் தான் திருமூர்த்தியின் சொந்த ஊர், அங்கு அவர் உட்பட நேற்று ஒரே நாளில் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதில் தனியார் தொலைக்காட்சியில் பணியாற்றும் ஊத்தங்கரையைச் சேர்ந்த நிருபர் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 4 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது


Share this:

Related posts

எஸ்.பி.பி. ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனை… மோட்ச தீபம் ஏற்றினார் இளையராஜா…!

AMARA

ட்விட்டரில் கட்டிப்புரண்டு சண்டை… இரண்டு நடிகைகளுக்கிடையே மாட்டிக்கொண்ட பிரபல இயக்குநர்…!!

NEWSKADAI

தற்காலிகமாக இருந்தால் மகிழ்ச்சி… நிரந்தரமானால் பெரும் பாதிப்பு… அமைச்சர் கடம்பூர் ராஜு

MANIMARAN M

கண்ணில் கனல் தெறிக்கும் கமல்… வெளியானது “பிக்பாஸ் சீசன் 4” ப்ரோமோ வீடியோ…!!

AMARA

மாஸ்க் போட்டு வந்த மலர் டீச்சரை மடக்கிய மாணவர்கள்… வளைச்சி, வளைச்சி போஸ் கொடுத்தே டையர்டு ஆன சாய்பல்லவி…!!

THAVAMANI NATARAJAN

மீரா மிதுனுக்கு சூசமாக பதிலடி கொடுத்த சூர்யா… ரசிகர்களுக்கு வைத்த அன்பான வேண்டுகோள்…!!

AMARA