Newskadai.com
இந்தியா

மாணவர்கள் நலனில் அக்கறை இல்லாத மத்திய அரசு… கொரோனாவை கண்டுகொள்ளாமல் தொடங்கியது JEE தேர்வு…!!

Share this:

கொரோனா (COVID19) நோய் தொற்று காரணமாக நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகள் காலவரையின்றி் மூடப்பட்டுள்ளன. எப்போது திறக்கப்படும் என்று யாருக்கும் தெரியவில்லை. தமிழகம் உட்பட பல மாநில அரசுகள் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு தேர்வு எழுதாமலேயே தேர்ச்சியை அறிவித்து வருகின்றன.  இந்நிலையில் NEET மற்றும் JEE தேர்வுகளை செப்டம்பர் முதல் வாரத்தில் நடத்த மத்திய அரசு தீவிரம் காட்டி வந்ததது.
இதற்கு மாணவர்கள் மத்தியிலும் பெற்றோர்கள் மத்தியிலும் கடும் அதிருப்தி நிலவுகிறது. கோவையில் ஒரு மாணவி இதன் காரணமாக தற்கொலை செய்து கொண்டார். இந்த ஆண்டு NEET மற்றும் JEE தேர்வுகளை நடத்த வேண்டாம் என்று மாணவர்கள், பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தும் மத்திய அரசு எந்த கோரிக்கைக்கும் செவி சாய்க்காமல் NEET மற்றும் JEE தேர்வை நடத்துவதில் உறுதியாக இருந்து வருகிறது.
90 சதவீத மாணவர்கள் நீட் தேர்வு நடைபெறுவதை விரும்புகிறார்கள் என்று மத்திய அமைச்சர் வழக்கம்போல தனது கருத்தை மாணவர்கள் கருத்தாக அள்ளி  விட்டார். இது எவ்வளவு பெரிய பொய் என்பதை ஜார்கண்ட் மாநில முதலமைச்சர் ஹேமந்த்சோரன் நிரூபித்துள்ளார். அவர் ஜார்கண்ட் மாநில மாணவர்களிடம்  NEET மற்றும் JEE தேர்வுகள் ஒத்திவைப்பு குறித்து பொது வாக்கெடுப்பு நடத்தினார். கிட்டத்தட்ட இரண்டு லட்சம் மாணவர்கள் இந்த வாக்கெடுப்பில் கலந்து கொண்டு வாக்களித்துள்ளனர். 70 சதவீத  மாணவர்கள் NEET மற்றும் JEE தேர்வுகள் ஒத்தி வைப்பதற்கு ஆதரவளித்துள்ளனர். மாணவர்களின் உண்மையான மனநிலை என்ன என்பதை ஹேமந்த்சோரன் ஆதார பூர்வமாக நிரூபித்து காட்டினார்.
இவ்வாறாக கடும் எதிர்ப்புகள் காட்டிய நிலையில் JEE Main தேர்வுகள் திட்டமிட்டபடி இன்று தொடங்கியது. தேசிய முகமை இத்தேர்வை வரும் 6-ம் தேதி வரை நடத்துகிறது. இத்தேர்வில் 5.58 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர். தேர்வை நடத்த அனைத்து மாநில முதல்வர்களும் ஒத்துழைப்பு தர வேண்டுமென மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நேற்று வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளனர். இதை தொடர்ந்து நீட் தேர்வு வரும் 13ம் தேதி நடக்க உள்ளது அதில் 15.97 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதவுள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.

Share this:

Related posts

லாக்டவுனிலும் வாடகை தந்தே ஆக வேண்டும்… ராஜஸ்தான் நீதிமன்றத்தின் அதிரடி…!..!

NEWSKADAI

கொரோனா தடுப்பூசி போட்டால் மட்டுமே மது வழங்கப்படும் – அரசின் அதிரடி அறிவிப்பு

AFRIN

12 மொழிகளில் தேசிய பொது தேர்வு… மத்திய அரசு அதிரடி அறிவிப்பு..!!

THAVAMANI NATARAJAN

ஆன்லைனில் சாத்தியமா நீட் தேர்வு?…. மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு…!!

MANIMARAN M

பெங்களூர் கலவரம்: இந்து கோயிலை சுற்றி இஸ்லாமியர்கள் அமைத்த பாதுகாப்பு அரண்… நெகிழ்ச்சி வீடியோ…!!

AMARA

சுயசார்பு திட்டத்தின்கீழ், 101 வகையான ராணுவத் தளவாடங்கள் இறக்குமதிக்குத் தடை… ராஜ்நாத் சிங் அறிவிப்பு..

MANIMARAN M