ஜே.இ.இ. மெயின் தேர்வுகள் நாடு முழுவதும் செப்டம்பர் 1-ந் தேதி முதல் செப்டம்பர் 6-ந் தேதி வரை 232 நகரங்களில் 660 மையங்களில் நடைபெற்றன. நாடு முழுவதுமுள்ள 25 ஐஐடிகள், 31 என்.ஐ.டிகள் மற்றும் மத்திய அரசின் உதவியுடனான 28 தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் சேருவதற்காக ஜே.இ.இ. தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இந்த ஆண்டு தேர்வு எழுத 11.74 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர்.
இதில் 10.23 லட்சம் பேர் (74% மாணவர்கள்) மட்டுமே தேர்வுகளை எழுதியிருந்தனர். தேர்வுகள் நிறைவடைந்ததையடுத்து நேற்று வெள்ளிக்கிழமை நள்ளிரவில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில் 24 மாணவர்கள் 100% மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். தமிழக மாணவர்கள் யாரும் 100% மதிப்பெண் பெறவில்லை. தமிழகத்தைச் சேர்ந்த மாணவர் கவுரவ் ஆர். கோச்சர் 99.99% மதிப்பெண்களையும், மாணவி நிரூபமா 99.92% மதிப்பெண்களையும் பெற்றுள்ளனர்.