Newskadai.com
இந்தியா

வேளாண் மசோதாவிற்கு எதிர்ப்பு… போராட்டக்காரர்களை கொலைவெறியுடன் தாக்கிய பாஜக தொண்டர்கள்…!

Share this:

பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கான தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்ட நிலையில், பாட்னாவில் பாஜக ஆதரவாளர்கள் ஜன ஆதிகர் கட்சியின் (ஜேஏபி) உறுப்பினரை வெள்ளிக்கிழமை தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது. பாட்னாவில் ஒரு டிராக்டரில் மத்திய அரசின் புதிய வேளாண் மசோதாக்களை எதிர்த்து ஜேஏபி கட்சியினர் ஊர்வலம் நடத்தினர்.

அவர்கள் பாட்னாவில் உள்ள வீர்சந்த் படேல் சாலையில் அமைந்துள்ள பாஜக அலுவலகம் வழியாக சென்றபோது, போலீசார் முன்னிலையிலேயே பாஜக ஆதரவாளர்கள் ஜன ஆதிகர் கட்சி ஆதரவாளர் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளனர். பின்னர் மோடிஜி ஜிந்தாபாத் என்ற முழக்கத்துடன் வாகனம் மற்றும் அதிலிருந்த ஒலி பெருக்கி சாதனங்களை அடித்து நொறுக்கினார்கள்.

இது தொடர்பாக ஜேஏபி கட்சி அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் கூறியதாவது: “முன்னாள் எம்.எல்.ஏ ராம் சந்திரா மற்றும் இரண்டு இளைஞர் தலைவர்கள் விஷால் குமார் மற்றும் மனீஷ் ஆகியோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்”, என்று கூறியுள்ளார். இத்தாக்குதலை கண்டித்து ஜேஏபி கட்சித் தலைவர் ராஜேஷ் ரஞ்சன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது, “எங்கள் கட்சிகாரர்கள் மீதான ஒவ்வொரு தாக்குதலுக்கும் மக்கள் பழி தீர்ப்பார்கள்.

விவசாயிகள் பீகாரில் பாஜகவை குழித் தோண்டி புதைப்பார்கள். என்று பாஜகவை கடுமையா சாடி பதிவிட்டுள்ளார். மேலும் எங்கள் முன்னாள் எம்.எல்.ஏ ராம்சந்திர யாதவ் மீது பாஜக குண்டர்கள் நடத்திய தாக்குதலுக்கு மக்கள் தகுந்த பதில் தருவார்கள். உழவர் எதிர்ப்பு நரேந்திர மோடி உங்கள் பயங்கரவாதிகளின் பயங்கரவாத நடவடிக்கைகளைப் பாருங்கள். உங்கள் முடிவு இன்று பீகாரில் தொடங்கி விட்டது” என்றும் பதிவிட்டுள்ளார்.


Share this:

Related posts

அசத்தல் உடையில் அயோத்திக்கு புறப்பட்ட மோடி… இன்னும் சற்று நேரத்தில் அடிக்கல் நாட்டுகிறார்…!!

NEWSKADAI

நாட்டையே உலுக்கிய தங்க கடத்தல் வழக்கு: முக்கிய புள்ளிகள் பற்றி வெளியான அதிர்ச்சி தகவல்…!

NEWSKADAI

இன்று முதல் ஜியோவின் அதிரடி ஆரம்பம்… 30 நாட்களுக்கு இலவசம்… வெறும் 399-ல் குறைவில்லாத டேட்டா…!!

AMARA

கோயிலுக்குள் நள்ளிரவில் நடந்த பயங்கரம்… 3 காவலாளிகளை கொடூரமாக கொன்ற கொள்ளை கும்பல்…!!

MANIMARAN M

தீராத செல்ஃபி மோகம்… சிறுமிகளுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை… வைரலாகும் வீடியோ…!

NEWSKADAI

காங்கிரஸின் அடுத்த தலைவர் யார்??? முடிவு செய்யக் கூடும் காரியக் கமிட்டி…

MANIMARAN M