Newskadai.com
தமிழ்நாடு

பாதிக்குமேல் அதிகரித்த கொரோனா பாதிப்பு… பீதியில் ஜலகை மக்கள்…

Share this:

சேலம் மாவட்டத்தில் மேட்டூர் வட்ட பகுதிகளில் தீவிரமடையும் கொரோனா பரவல் கடந்த வாரம் ஜலகண்டாபுரம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 50க்கும் மேற்கொண்டோருக்கு உறுதி செய்யப்பட்டது. ஜலகண்டாபுரத்தில் கறி விருந்து அளித்த குடும்பத்திலிருந்து ஒருவர் உட்பட அடுத்தடுத்து இருவர் உயிரிழந்தனர். இந்த உயிரிழப்புகள் கொரோனாவால் நிகழ்ந்தனவா என்ற பீதி அந்த ஊர் முழுவதும் பரவியது. இதையடுத்து அந்த விருந்தில் கலந்துக் கொண்ட சுமார் 150 நபர்களுக்கும் பரிசோதனை செய்யப்பட்டு 50க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.

மேலும் படிக்க: http://ஊராட்சி மன்ற தலைவி புருஷனுக்கும் – கவுன்சிலர் கணவருக்கும் மோதல்… போனில் கழுவி ஊற்றிக்கொண்ட திமுக – அதிமுக பிரமுகர்கள்…!!

அதிகரித்த எண்ணிக்கையால் ஜலகண்டாபுரம் ஆகஸ்ட் 27 வரை ஒரு வாரம் முழு ஊரடங்கிற்கு உட்படுத்தப்பட்டுள்ளது. மருத்துவமனை மற்றும் மருந்தகம் தவிர அனைத்து கடைகளும் மூடப்பட்டன. இந்த காலக்கட்டத்தில் சுகாதாரத்துறை ஜலகண்டாபுரத்தில் வீடு வீடாக சென்று கொரோனா பரிசோதனையை அதிரடியாக மேற்கொண்டு வருகிறது. பொதுமக்கள், கடை வியாபாரிகள், வங்கி பணியாளர்கள் என 150-க்கும் மேற்பட்டோருக்கு மேல் கொரோனா பரிசோதனை செய்திருக்கின்றனர்.

மேலும் படிக்க: http://சாப்பாடு, தண்ணீர் கிடைக்காமல் அல்லாடும் கொரோனா நோயாளிகள்… கிருஷ்ணகிரி ஆட்சியருக்கு வைத்த கோரிக்கை வீடியோ…!!

நேற்று வரை வந்த பரிசோதனை முடிவுகளின்படி 91 நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் மேச்சேரியில் உள்ள தனிமைப்படுத்தும் மையம் மற்றும் மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.


Share this:

Related posts

ரெடியா இருங்க ஜலகண்டாபுரம்… இன்னைக்கு வீட்டுக்கே வரப்போறாங்க… தூள் பறக்கும் தொற்று தடுப்பு…!

AMARA

8-வது படித்திருந்தால் போதும்..! சென்னை உயர்நீதிமன்றத்தில் வேலை பார்க்கலாம்..!

AFRIN

கட்சிபாகுபாடியின்றி அடித்து தூக்கிய மு.க.ஸ்டாலின்… மட்டற்ற மகிழ்ச்சியில் பிரேமலதா, டிடிவி…!

NEWSKADAI

தமிழகத்தில் கோவை, சேலம் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு…

MANIMARAN M

கந்த சஷ்டி கவச அவதூறு: கறுப்பர் கூட்டம் சுரேந்திரன் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்…!!

NEWSKADAI

கொரோனா குறைந்தாலும் அலட்சியம் வேண்டாம்… மத்திய, மாநில அரசுகளை அலார்ட் செய்த ஐகோர்ட்…!

NEWSKADAI