Newskadai.com
அரசியல்

எடப்பாடியாரின் நல்லாட்சியால் தான் மழை வெளுத்து வாங்குகிறது… அமைச்சரின் அதிரடி பேச்சு..!!

Share this:

ஈரோட்டில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது, முதல்வர் பழனிசாமி ஜெயலலிதா வழியில் நல்லாட்சி நடத்தி வருகிறார். அதன் பலனாக தான் விவசாயிகள், மக்கள் மகிழும் அளவிற்கு எங்கும் மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் தான் கொரோனா தடுப்பு பணி சிறப்பாக உள்ளது என்று பிரதமர் மோடி பாராட்டினார்.

அந்த வகையில் முதல்வரின் செயல்பாடுகள் சிறப்பாக உள்ளது என்று கூறினார். மேலும் முதல்வருக்கும், துணை முதல்வருக்கும் இடையில் நடக்கும் கருத்து மோதல் குறித்த செய்தியாளரின் கேள்விக்கு, “அறைக்குள் பேசுவதை வெளியில் கூறுவது நாகரிகம் அல்ல என்பது தான் எனது கருத்து” என்று கூறியுள்ளார்.

அதிமுகவின் அடுத்த முதல்வர் வேட்பாளர் யார் என்பது அக்டோபர் 7ஆம் தேதி அறிவிக்கப்படும் என்ற அறிவிப்பிற்கு பிறகு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியையும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தையும் அதிமுக அமைச்சர்கள், நிர்வாகிகள் என தனித்தனியாக சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பழனிசாமிதான் முதல்வர் வேட்பாளர் என்றும், அமைச்சர் செங்கோட்டையன் முதல்வர் பழனிசாமியால் தான் எங்கும் மழை பொழிகிறது என்றும் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.


Share this:

Related posts

#GoBackModi தமிழகத்தைத் தொடர்ந்து பீகாரிலும் டிரெண்டிங்.!!!

MANIMARAN M

போடி போஸ்டர் விவகாரம்… சத்தமில்லாமல் ஓ.பி.எஸ். போட்ட அதிரடி உத்தரவு…!!

AMARA

மருத்துவ படிப்பில் உள் ஒதுக்கீடு : அரசுக்கு எல்.முருகன் வைத்த அதிரடி கோரிக்கை…!

MANIMARAN M

கலைவாணர் அரங்கத்தில் இன்று தொடங்குகிறது சட்டமன்ற கூட்டத் தொடர்…

MANIMARAN M

காய்கறி மாலையோடு சட்ட நகல் கிழிப்பு… வேளாண் மசோதாவிற்கு வேறமாதிரியான போராட்டம்..!!

MANIMARAN M

இழி துரோக வரலாற்றில் இடம் பெறுவாய்… 800 பட விவகாரத்தில் விஜய் சேதுபதிக்கு ராமதாஸ் எச்சரிக்கை…!

NEWSKADAI