Newskadai.com
சினிமா வீடியோ

“சீக்கிரமா எழுந்து வா”… பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்திற்காக இளையராஜா வெளியிட்ட உருக்கமான வீடியோ…!!

Share this:

பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு கடந்த 5ம் தேதி கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் சென்னை சூளைமேட்டில் உள்ள எம்.ஜி.எம். மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்த எஸ்.பி.பி, தனக்கு லேசனா அறிகுறிகள் மட்டுமே இருப்பதாகவும், வீட்டில் இருந்தே சிகிச்சை பெற மருத்துவர்கள் அறிவுறுத்தினாலும் தன்னை குடும்பத்தினர் தனிமையில் இருக்க விடமாட்டார்கள் என்பதால் மருத்துவமனையில் சேர்ந்துள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் தனக்கு முழு ஓய்வு தேவை என்பதால் யாரும் போன் செய்ய வேண்டாம், நான் நலமுடன் இருக்கிறேன் என உறுதி செய்தார்.

SPB

இந்நிலையில் நேற்று வரை எஸ்.பி.பி நல்ல உடல் நலத்துடன் இருந்து வந்தார். இன்று மாலை எம்.ஜி.எம். மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், எஸ்.பி.பி.பாலசுப்ரமணியம் கடந்த 5ம் தேதி முதல் கொரோனா தொற்றுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று இரவு அவரின் உடல்நலம் திடீர் என மோசமடைந்தது. மருத்துவ நிபுணர்களின் அறிவுரையின்படி எஸ்.பி.பி. ஐசியூவிற்கு மாற்றப்பட்டார். அவருக்கு செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டுள்ளது. அவரின் நிலைமை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது” என அதிர்ச்சி கொடுத்தது.

இதனால் கவலை அடைந்த ரசிகர்கள் மற்றும் திரைத்துறை நட்சத்திரங்கள் பலரும் எஸ்.பி.பி நலம் பெற வேண்டுமென வாழ்த்து கூறி வருகின்றனர். ஏ.ஆர்.ரகுமான், ஹாரிஸ் ஜெயராஜ், பார்த்திபன், ராதிகா சரத்குமார், தனுஷ், அனிருத் என பலரும் தங்களது பிரார்த்தனை மற்றும் வாழ்த்துக்களை ட்விட்டரில் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் எஸ்.பி.பி. நண்பரான இசைஞானி இளையராஜா அவர் விரைவில் நலம் பெற வேண்டுமென வாழ்த்தி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

“உனக்காக காத்திருக்கிறேன் சீக்கிரம் எழுந்து வா… நம்முடைய வாழ்வு வெறும் சினிமாவோடு முடிந்து போவது அல்ல, சினிமாவில் ஆரம்பித்ததும் அல்ல. எங்கேயோ மேடை கச்சேரிகளில் நாம் ஒன்று சேர்ந்து ஆரம்பித்த அந்த இசை நிகழ்ச்சி, இசை நமது வாழ்வாகவும், நமக்கு முக்கியமான வாழ்வாதாரமுமாக மாறியது. இசை எப்படி ஸ்வரங்களை விட்டு நீக்காமல் இருக்கிறதோ, அதுபோன்றது நமது நட்பும் எந்த காலத்திலும் பிரிந்தது இல்லை. நாம் சண்டை போட்டாலும் சரி, சண்டை இல்லாமல் போன போதும் நட்போ என்பதை நீயும், நானும் நன்றாக அறிவோம். நான் இறைவனிடம் பிரார்த்திக்கிறேன். நீ நிச்சயம் நல்ல படியாக திரும்பி வருவாய் என என் உள் உணர்வு சொல்லுகிறது. அது நிஜமாக நடக்கட்டும் என இறைவனை பிரார்த்திக்கிறேன். பாலு சீக்கிரம் வா…! என மிகவும் தழு தழுத்த குரலில் உருக்கமாக பேசியுள்ளார். வைரலாகி வரும் வீடியோ இதோ…


Share this:

Related posts

கொலையா? தற்கொலையா?… சிபிஐ கைக்கு போன சுஷாந்த் மரண வழக்கு…!!

MANIMARAN M

காதலியை கரம் பிடித்தார் “பாகுபலி” வில்லன் ராணா… வைரலாகும் திருமண புகைப்படங்கள்…!

AMARA

“பிகில்” லெவலுக்கு வெறித்தனம் காட்டும் ஆமை… செம்ம மாஸ் வீடியோ….!!

NEWSKADAI

கார்ல வந்து எதுக்குடா உனக்கு இந்த கேவலமான பொழப்பு… அசிங்கப்பட்டான் ஆபீசர் வீடியோ…

NEWSKADAI

ராணுவ வீரர்களின் தேசபக்தி… நெஞ்சைநிமிர வைக்கும் வீடியோ…

NEWSKADAI

நயன்தாரா பட தயாரிப்பாளருக்கு கொரோனா… தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை…!!

NEWSKADAI