Newskadai.com
சினிமா

நான் முஸ்லிம் என்பதால் கற்பழிப்பேன் என மிரட்டுவதா?… பிரதமரிடம் நியாயம் கேட்டு கொந்தளித்த குஷ்பு…!!

Share this:

திமுக விலிருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்து அதன் செய்தித் தொடர்பாளராக செயலாற்றி வருபவர் நடிகை குஷ்பு. இவர் சமூக வலைதளங்களில் படு ஆக்டிவாக இருக்கும் பிரபலம். கடந்த புதன்கிழமை தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை இட்டு, அதில் பிரதமர் நரேந்திர மோடியையும், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியையும் டேக் செய்துள்ளார்.

   

அவர் தன்னுடைய பதிவில் எழுதியிருப்பதாவது, “தன்னை பலாத்காரம் செய்துவிடுவதாக அடிக்கடி செல்போன் மூலம் ஒருவர் மிரட்டல் விடுக்கிறார். மிரட்டல் வரும் போன் நம்பர் சஞ்சய் ஷர்மா என்பவருடையதாகவும், அந்த மிரட்டல் கொல்கத்தாவில் இருந்து செய்யப்படுவதாகவும் தெரிகிறது. இது தொடர்பாக கொல்கத்தா காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த செல்போன் எண்ணையும் குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார்.

மேலும் படிக்க:http://இந்தியன் 2 கிரேன் விபத்து: பலியானோர் குடும்பத்திற்கு கமல், ஷங்கர் கொடுத்த ரூ.4 கோடி நிதி உதவி…!!

தனது பதிவில் பிரதமர் நரேந்திர மோடியை டேக் செய்த நடிகை குஷ்பு, “நான் ஒரு முஸ்லீம் என்பதால் அந்த நபர் தன்னை பலாத்காரம் செய்துவிடுவதாக மிரட்டல் விடுக்கிறார். இது தான் ராமரின் பூமியா…? என்று பிரதமரிடம் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் தன் பதிவில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை டேக் செய்து, இத்தொடர் மிரட்டல் குறித்து முதல்வர் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றும், தனக்கே இந்த நிலை என்றால், மற்ற பெண்களின் நிலையை எண்ணிப் பாருங்கள் என்றும் பதிவிட்டுள்ளார்.

 

நடிகை குஷ்புவின் இப்பதிவின் பின்னூட்டத்தில் ஒருவர், நீங்கள் ஏன் இதை பொது தளத்தில் பதிவிட்டுள்ளீர்கள் என்று கேட்டிருந்தார். அதற்கு குஷ்பு “நீங்கள் ஏன் இதை பொது தளத்தில் பதிவிட்டுள்ளீர்கள் என்று கேட்டிருக்கின்றீர்கள், எனக்கு மிரட்டல் விடுக்கும் நபருக்கும் ஒரு குடும்பம் இருக்கும். இதுப் போன்ற அருவறுப்பான நபர்களை பொது தளத்தில் அசிங்கப்பட செய்ய வேண்டும் என்பதால் தான்” என்று பதிலளித்துள்ளார்.


Share this:

Related posts

இது வேற லெவல் வெறித்தனமால்ல இருக்கு… மதுரை சிம்பு ரசிகர்களின் தெறி மாஸ் போஸ்டர்…!

AMARA

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் சக நடிகையால் கதறி அழுத முல்லை… வைரலாகும் வீடியோ…!!

THAVAMANI NATARAJAN

அபாய கட்டத்தில் எஸ்.பி.பி… தீவிர ஆலோசனையில் மருத்துவர்கள்… தற்போதைய நிலவரம் என்ன?

AMARA

ஒரே வாரத்தில் இன்னொரு தமிழ் நடிகர் கொரோனாவுக்கு பலி… அதிர்ச்சியில் திரையுலகம்…!

NEWSKADAI

“ஆகஸ்ட் மாதம் தியேட்டர்களை திறக்கலாம்”… மத்திய அரசின் பரிந்துரையால் நொந்து போன திரையரங்கு உரிமையாளர்கள்…!

NEWSKADAI

பூங்காவில் ஆபாச உடையில் பயிற்சி… பிரபல நடிகையை தாக்க முயன்ற கும்பல்… பரபரப்பு வீடியோ…!

NEWSKADAI