தர்பார் படத்திற்கு பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்து வரும் திரைப்படம் அண்ணாத்த. இந்த படத்தில் பல வருடங்களுக்கு பிறகு மீனாவும், குஷ்புவும் நடித்துள்ளனர். அதேபோல் கீர்த்தி சுரேஷ், நயன்தாரா ஆகியோரும் நடித்துள்ளனர். இந்த படத்தின் ஷூட்டிங் ஐதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வந்த நிலையில், கொரோனா ஊரடங்கு காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் இந்த படத்தில் முதலில் மீனா ரஜினிக்கு ஜோடியாகவும், கீர்த்தி சுரேஷ் தங்கையாகவும் நடிக்க உள்ளதாக கூறப்பட்டது. குஷ்பு வில்லி கதாபாத்திரத்திலும் நயன்தாரா முதன் முறையாக வக்கீலாகவும் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் இந்நிலையில் அண்ணாத்த படத்தின் கதை என்ற பெயரில் இணையத்தில் உலவும் கதையை படித்து பார்த்த ரஜினி ரசிகர்கள் செம்ம கடுப்பில் உள்ளனர்.
அதாவது ரஜினியை மீனாவும், குஷ்புவும் போட்டு போட்டு காதலிக்கிறார்கள், ஆனால் இருவரில் யாரை மணந்தாலும் மற்றொருவரின் மனம் புண்படும் என நினைக்கும் ரஜினி வேறு ஒரு பெண்ணை மணக்கிறார். அந்த தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை பிறக்கிறது, அதுதான் நம்ம கீர்த்தி சுரேஷ். ரஜினியை தான் அடைய முடியவில்லை. அவருடைய மகளையாவது நம்ம பசங்களுக்கு மணமுடிக்க வேண்டும் என குஷ்பு, மீனா இருவரும் போட்டிக்கு நிற்கிறார்கள்.
இதில் யார் ஜெயித்தார்கள் என்பது தான் கிளைமேக்ஸ். சிறுத்தை சிவா கதை என்றால் சென்டிமெண்ட், ஆக்ஷன் என எல்லாமே செம்ம சூப்பராக இருக்கும். ஆனால் அண்ணாத்த பட கதை ரொம்ப சுமாரா இருக்கே என ரஜினி ரசிகர்கள் தலையில் அடித்துக்கொண்டு புலம்பி வருகிறார்களாம்…