Newskadai.com
லைஃப் ஸ்டைல்

சேமிக்கிற காசை டபுளாக்க இப்படியெல்லாம் வழியிருக்கா?… இதுவரைக்கும் இதெல்லாம் தெரியாமல் போச்சே…!

Share this:

இப்போதைய நெருக்கடி நேரத்தில் கொரோனா சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்ந்திருக்கும் பல குடும்பங்களை கேட்டால் தான் தெரியும், ஏதாவது ஒருவகையான சேமிப்பை கையிருப்பில் வைக்காவிட்டால் எப்படிப்பட்ட பிரச்சனைகளை எல்லாம் சந்திக்க நேரிடும் என்று. தனியார் மருத்துவமனை தீட்டி கையில் கொடுக்கும் பில்லைப் பார்த்தாலே நமக்கு தலை சுற்றிவிடும், அது போதாது என விதவிதமாக கொரோனா பேக்கேஜ்கள் வேறு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இதுக்கு தான் ஒரு ஹெல்த் இன்சூரன்ஸ் எடுக்கன்னு அப்பவே சொன்னேன் என ஒரு குரல் மண்டைக்குள் ஓங்கி ஒலிக்கும். ஆனால் நிதர்சனமான உண்மை என்ன இப்படிப்பட்ட திடீர் நோயில் இருந்து உங்களுடைய ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனம் காக்க முன்வருமா?. இதற்கு வழி தான் என்ன?.

சரி, கொரோனா தொற்றிலிருந்து தப்பிவிட்டோம் என்று வைத்துக்கொள்ளுங்கள், ஊர் முழுவதும் இப்போது ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த மாதிரி சமயத்தில் நம்முடைய பணத்தேவைகளுக்கு என்ன செய்வது. இந்த மாதிரி நேரங்களில் நமக்கு கைகொடுக்கும் ஒரே ஆபத்பாந்தவன் நமது சேமிப்பு மட்டுமே. விக்கிற விலைவாசியில் இருக்குற சம்பளத்தை வச்சிக்கிட்டு என்ன பண்றதுன்னு தெரியல… இதுல எங்கிருந்து சேமிக்கிறது என நீங்கள் புலம்பறது எங்களுக்கு நல்லாவே கேக்குது.

ஆயுள் முழுவதும் ஓடி, ஓடி உழைக்கும் தொகையை சேர்த்து வைக்க நினைப்பது முதுமையில் செழுமையாக வாழ மட்டும் அல்ல, இக்கட்டான நேரங்களில் சுமையை குறைக்கவும் தான். சேமிப்பும் ஆயுள் காப்பீடும் நம் வாழ்வின் மிக முக்கியமான இடத்தில் உள்ளது. ஒரு புறம் அவசர தேவைகளுக்கு சிறிது, சிறிதாக எடுத்துக் கொள்வது போலவும் (Savings), இடையில் எடுக்காமல் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு சேர்த்து வைப்பது போன்றும் (Recurring Deposit) இரண்டு விதமான சேமிப்புகள் அவசியமாகிறது.

முதல் வகைக்கு தபால் அலுவலகம் அல்லது வங்கிகளில் கணக்கு தொடங்கி சேமிக்கலாம். இரண்டாவது வகை சேமிப்புக்கு ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களில் சேமிப்பது சிறந்தது. அடபோங்க… சேமிப்புக்கு வழி சொல்வதாக சொல்லிவிட்டு இன்சூரன்ஸ் கம்பெனியில் பணத்தை போட சொல்லுறீங்களே என அலுத்து கொள்ளாதீர்கள். ப்ரீயமாக நாம் மாத, மாதம் செலுத்தும் தொகையும், வங்கி அல்லது தபால் அலுவலகத்தில் சேமிக்கும் Recurring Deposit(RD) போன்றது தான்.

வங்கியிலோ, தபால் அலுவலகத்திலோ நீங்கள் சேமிக்கும் RD தொகையை ஏதாவது சிக்கல் காரணமாக இடையில் எடுக்க நேர்ந்தால் ஆயுள் காப்பீடு தொகை கிடைக்காது. அதற்கு பதிலாக நீங்கள் சேமித்த தொகை மட்டுமே சிறிது வட்டியுடன் திரும்ப கிடைக்கும். ஆனால், ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் நீங்கள் சேமிக்கும் போது உங்களுக்கு இடர் ஏற்பட்டால் நீங்கள் சேமித்த தொகை பல மடங்கு தொகையாக திரும்ப கிடைக்கும். முதிர்வு தொகையாகவும் வாழ்நாளின்போதே பயன் பெறலாம்.

மூன்று வருடங்களுக்கு ஒரு முறை சேமித்த தொகையில் ஒரு பகுதியை எடுத்து உபயோகித்துக்கொள்ளும்படியான திட்டங்களும் உள்ளன. உழைத்து சம்பாதிப்பதை உங்கள் பிள்ளைகளுக்கு கற்றுத்தரும் அதே வேளையில், சம்பாதித்த பணத்தில் ஒரு பகுதியை சேமிக்கவும் அதை ஆயுள் காப்பீட்டுடன் கூடிய சேமிப்புகளில் சேமித்து வைக்கும் பழக்கத்தையும் பிள்ளைகளுக்கு கற்றுத் தருவதும், நீங்களும் கற்றுக்கொள்வதும் அவசியமாகும்.

எந்தவித சேமிப்பும் ஆயுள் காப்பீடுமின்றி குடும்பத்தை நிர்கதியாக விட்டுச் செல்பவர் அக்குடும்பத்திற்கு துரோகம் செய்தவராகிறார்.

  • உங்கள் குழந்தைகளின் கல்வி மற்றும் திருமண நேரங்களில் பணத்திற்கு சிரமப்படும் சிக்கலை தவிர்க்க குழந்தைகளுக்கான சேமிப்புத் திட்டங்களில் இன்றே உங்கள் ஆயுள் காப்பீட்டுடன் கூடிய சேமிப்பை தொடங்கலாம்.

 

  • முதுமைக்காலத்தில் பிறரை நம்பியிருக்காமல் வாழ இன்றே ஓய்வூதிய திட்டங்களில் உங்கள் சேமிப்பை தொடங்கலாம். குறுகிய கால சேமிப்பில் உங்கள் பணத்தை இரட்டிப்பாக வளர்க்கும் முதலீட்டு திட்டங்களும் உள்ளன.

 

  • வாகனங்களை காப்பீடு செய்வது போல, நமக்கும் காப்பீடு செய்து கொள்ளும் டெர்ம் ஆயுள் காப்பீடு திட்டங்களும் உள்ளன. அதில் Health கவரேஜ் கொண்ட திட்டங்களும் உள்ளன.

நமது வருமானத்தையும் எதிர்கால தேவையையும் பாதுகாப்பையும் கூட்டி கழித்து அதற்கேற்ப தகுந்த திட்டத்தை தேர்ந்தெடுத்து சேமிக்க தொடங்கலாம். நீங்கள் 15,000₹ வரை கட்டும் ப்ரீமியத்திற்கு 80C பிரிவின் கீழ் வரிவிலக்கும், ஆயுள் காப்பீட்டு தொகைக்கு 10(10D) பிரிவின் கீழ் வருமான வரி விலக்கும் பெறலாம்.

Deposit

“ஆயுள் காப்பீடு என்பது வெறும் காகிதம், இறந்த பிறகு மட்டும் கிடைக்கும் தொகை” என்பது போன்ற அறியாமை பிரச்சாரங்களிலிருந்தும் எதிர்மறை எண்ணங்களிலிருந்தும் விலகி இருங்கள்.உங்கள் சேமிப்பை இன்றே தொடங்குங்கள்.

வளம் பெற வாழ்த்துக்கள்
இ.குமரன்
நிதி ஆலோசகர்.
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா-ஆயுள் காப்பீட்டு பிரிவு.


Share this:

Related posts

கொரோனாவிற்கு எதிராக போர் புரிய வரும் AZD-1222

NEWSKADAI

கஷ்டங்கள் போக்கும் கருட பஞ்சமி… இந்த வழிபாட்டை இன்று கட்டாயம் செய்யுங்கள்…!

NEWSKADAI

சிறுகதை : அசுரப்படை – முனைவர்.ஆதன் குமார்

NEWSKADAI

கார்மேக வண்ணா… எங்கள் கண்ணா… ஓடி வா கிருஷ்ணா… உலகமே உன் கோகுலம்!

THAVAMANI NATARAJAN

குழந்தை பேறு தரும் சஷ்டி விரதம்… எப்படி, எங்கு கடைபிடிக்க வேண்டும் தெரியுமா?

NEWSKADAI

அத்திமுகத்தோனுக்கு பிறந்த நாள் விழா… தீராத வினையெல்லாம் தீர்க்கும் விநாயகர்…

THAVAMANI NATARAJAN