Newskadai.com
தமிழ்நாடு

விநாயகர் ஊர்வலம்… தளர்வுகளுக்கு வாய்ப்புள்ளதா…? உயர் நீதிமன்றம் கேள்வி..

Share this:

தமிழகத்தில் இந்த ஆண்டு விநாயகர் சதூர்த்தி பண்டிகையை முன்னிட்டு பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைப்பதற்கும், ஊர்வலத்திற்கு அனுமதியில்லை என்று தடை விதித்து தமிழக அரசு அறிவித்திருந்தது. கொரோனா பரவலை தடுக்கும் நடவடிக்கையாக பொது மக்கள் நலன் கருதி பொது வெளியில மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க இந்த தடையை விதித்துள்ளது மாநில அரசு. இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த இல. கணபதி என்பவர் தமிழக அரசின் தடை உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும், பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடவும் ஊர்வலமாக எடுத்துச்சென்று கடலில் கரைக்கவும் அனுமதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று இந்த மனு, நீதிபதிகள் எம்.எம் சுந்தரஷ் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. இதில் நீதிபதிகள், தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜயநாராயண் அவர்களிடம் “இந்த கொரோனா தொற்று பரவல் நேரத்தில் பெரிய அளவிலான ஊர்வலங்களை அனுமதிக்க முடியாது என்பதில் மாற்றுக் கருத்தில்லை என தெரிவித்த நீதிபதிகள், சிலையை வைத்து வழிபட்ட பின் 5 அலலது 6 நபர்களுக்கு மிகாமல் பேரிடர் விதிகளை பின்பற்றி பொதுமக்கள் அதனை பெரிய கோயில்கள் அருகில் கொண்டு வைத்து விடுவது, அல்லது தாங்களே சொந்தமாக இருசக்கர வாகனத்தில் எடுத்துச் சென்று கடற்கரையில் கரைத்து விடுவது போன்றவற்றை அனுமதிக்க சாத்தியக்கூறுகள் உள்ளதா? என கேள்வி எழுப்பினர்.

இதற்கு தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர், கூட்டம் கூடி ஊர்வலமாக செல்வதும், சிலைகளை பெரிய பெரிய வாகனங்களில் எடுத்து கூட்டமாக சென்று கடலில் கரைப்பதற்கு மட்டுமே தடை விதிக்கப்பட்டுள்ளதே தவிர, முக கவசங்கள் அணிந்து, சமூக விலகளை பின்பற்றி ஐந்துக்கும் குறைவான நபர்கள் சிலைகளை கொண்டு செல்ல எந்த தடையும் இல்லை என தெரிவித்தார். மேலும், இது குறித்து உரிய விளக்கத்தை நாளை காலையில் அளிப்பதாகவும் உறுதி அளித்தார். இதனைத் தொடர்ந்து இந்த வழக்கின் மீதான விசாரணையை நீதிபதிகள் நாளைக்கு ஒத்தி வைத்தனர்.

 


Share this:

Related posts

பள்ளியில் பசுமை புரட்சி… அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வாழ்த்து…!!

NEWSKADAI

கந்த சஷ்டி கவச அவதூறு: கறுப்பர் கூட்டம் சுரேந்திரன் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்…!!

NEWSKADAI

ஊழியர்களின் ஊதியத்தில் கை வைக்கும் “Swiggy”… கொதித்தெழும் சீமான்..

MANIMARAN M

இன்று முதல் ஜியோவின் அதிரடி ஆரம்பம்… 30 நாட்களுக்கு இலவசம்… வெறும் 399-ல் குறைவில்லாத டேட்டா…!!

AMARA

தஞ்சையில் பலகோடி மதிப்புள்ள அரியவகை ஓலைச்சுவடிகள் அபேஸ்… பொன்.மாணிக்கவேல் விசாரிக்க கோரிக்கை…

THAVAMANI NATARAJAN

கொட்டித் தீர்க்கும் பருவ மழை… விவசாயிக்கு சாதகமா…? பாதகமா…?

THAVAMANI NATARAJAN