இந்தியில் 13 சீசன்களை கடந்துவிட்ட பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழில் இதுவரை 3 சீசன்களை கடந்துள்ளது. முதல் இரண்டு சீசன்களில் களம் இறக்கப்பட்ட பிரபலங்களுக்கு போட்டியாக, 3வது சீசனின் களம் இறங்கிய இளைஞர்கள் பட்டாளம் அடித்து தூள் கிளப்பியது. சாண்டி, தர்ஷன், கவின், முகென் என பாய்ஸ் டீம், சாக்ஷி, அபிராமி, லாஸ்லியா என கேர்ஸ் டீம் என செம்ம யங் பட்டாளத்தை விஜய் டி.வி. களமிறக்கியிருந்தது.
கடந்த ஜுன், ஜூலை மாதத்திலேயே தொடங்கவிருந்த தற்போது கொரோனா பிரச்சனை காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் அடுத்த மாதம் முதல் நிகழ்ச்சியை தொடங்குவதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இந்த முறை நடிகைகள் அதுல்யா, ரம்யா பாண்டியன், கிரண், வித்யூலேகா, சுனைனா மற்றும் குக் வித் கோமாளி புகழ் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளதாகவும், அதற்கான பேச்சுவார்த்தைகளும் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
என்னது அதுல்யா, ரம்யா பாண்டிய, சுனைனாவா என பிக்பாஸ் ரசிகர்கள் கொண்டாடும் அதே நேரத்தில், 2021க்கான சட்டப்பேரவை தேர்தல் களம் தற்போதிலிருந்தே சூடு பிடிக்க ஆரம்பித்து விட்டதால் இந்த நிகழ்ச்சியை மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாசன் தொகுத்து வழங்குவாரா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. ஆனால் இவை குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.