கர்நாடக காவல்துறையில் பணியாற்றி வந்த தமிழகத்தைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். அவருடைய கம்பீரமும் அதிரடி நடவடிக்கைகளும் அவரை கர்நாடகா சிங்கம் என புகழ வைத்தது. அப்படி கெத்தாக சுற்றியவர் திடீரென அதிலிருந்து விலகியது ஏன் என்ற கேள்வி, தமிழக அரசியலில் இறங்கி ஒரு கலக்கு கலக்க முடிவெடுத்துள்ளதாக அப்போது தகவல்கள் கசிந்தன. ஆனால் அதுகுறித்து அண்ணாமலை அப்போது எவ்வித விளக்கமும் கொடுக்கவில்லை.
மேலும் படிக்க:http://மீனாட்சி!.. மீனாட்சி!!… என்னாச்சு!?.. என்னாச்சு!!?… கைலாசா நாட்டு நாணயம் வந்தாச்சு..!!
இதனையடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்தால் இவர் தான் முதல்வர் வேட்பாளர் என அனைவரும் பேசத் தொடங்கினர். ஆனால் அவரோ எனக்கும், அரசியலுக்கும் சம்மந்தமே கிடையாது என்பது போல் இயற்கை விவசாயம் செய்து வந்தார். சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூட எனக்கு பிரதமர் மோடியை மிகவும் பிடிக்கும் எனக்கூறி ரஜினி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். அதே சமயத்தில் ரஜினிக்கு ஆதரவாகவும் பேசி குழப்பி வந்தார். இந்நிலையில் இன்று காலை 11 மணிக்கு டெல்லியில் பாஜக தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் அக்கட்சியில் இணைய உள்ளார்.
இதுகுறித்து விளக்கம் கொடுத்துள்ள அண்ணாமலை, தமிழகத்திற்கு ஒரு மாற்றம் தேவைப்படுகிறது. அதை பாஜகவால் மட்டுமே தர முடியும் என நம்புகிறேன். அதனால் தான் பாஜகவில் இணைய உள்ளேன். ரஜினிகாந்த் கட்சியில் ஏன் சேரவில்லை என்பது குறித்து பின்னர் விரிவான அறிக்கை வெளியிடுவேன் என்று தெரிவித்துள்ளார்.