Newskadai.com
விளையாட்டு

கொல்கத்தா அணியை துவம்சம் செய்த பெங்களூர் அணியின் பந்து வீச்சு

IPL 2020 MATCH 28 RCB vs KKR
Share this:

ஐபிஎல் (2020)தொடரின் 28வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. டாஸ் ஜெயித்த பெங்களூர்அணி பேட்டிங் தேர்வு செய்தது. பெங்களூர் அணியின் ஆரோன் பின்ச் – தேவ்தத் படிக்கல் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். தேவ்தத் 32 ரன்களில் ஆட்டமிழந்தார்.

IPL 2020 MATCH 28 RCB vs KKR

ஆரோன் பின்ச் நிதான ஆட்டம் ஆடினார். மறுபுறம் விராட் கோலி ஆமை வேகத்தில் ஆடி அதிர்ச்சி அளித்தார். பின்ச் 47 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஏபி டி வில்லியர்ஸ் அடித்து ஆடத் துவங்கினார்.கோலி – டி வில்லியர்ஸ் ஜோடி 46 பந்துகளை சந்தித்து 100 ரன்கள் குவித்தது.

IPL 2020 MATCH 28 RCB vs KKR

16வது ஓவர் முதல் பவுண்டரி களாக அடித்துத் தள்ளினார் டி வில்லியர்ஸ். 33 பந்துகளில் 73 ரன்கள் குவித்து கடைசி வரை களத்தில் இருந்தார்.விராட் கோலி 28 பந்துகளில் 33 ரன்கள் எடுத்தார். 20 ஓவர்கள் முடிவில் பெங்களூர் அணி 2 விக்கெட்களை இழந்து 194 ரன்கள் குவித்தது.

IPL 2020 MATCH 28 RCB vs KKR

195 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணிக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. சாஹல் – வாஷிங்க்டன் சுந்தர் பந்துவீச்சில் கொல்கத்தா அணி வீரர்கள் ரன் எடுக்க முடியாமல் தடுமாறினார். சொற்ப ரன்களில் அனைத்து வீரர்களும் ஆட்டமிழந்தனர்.

IPL 2020 MATCH 28 RCB vs KKR

டாம் பான்டன் 8, ராணா 9, மார்கன் 8, தினேஷ் கார்த்திக் 1, ரஸ்ஸல் 16, திரிபாதி 16 ரன்களில் ஆட்டமிழந்தனர். ஷுப்மன் கில் மட்டுமே 25 பந்துகளில் 34 ரன்கள் எடுத்து இருந்தார். அதுவே இந்தப் போட்டியில் கொல்கத்தா பேட்ஸ்மேன் ஒருவரின் அதிகபட்ச ஸ்கோர்.

IPL 2020 MATCH 28 RCB vs KKR

மேலும் படிக்க http://நவ. 4-ல் மகளிர் T20 : கிரிக்கெட் ரசிகர்களுக்கு மற்றுமொரு விருந்து.. பிசிசிஐ அறிவிப்பு!

20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 9 விக்கெட் இழப்பிற்கு 112 ரன்கள் மட்டுமே எடுத்தது. பெங்களூர் அணி 82 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது.


Share this:

Related posts

கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிர்ச்சியான செய்தி… தள்ளிப்போகிறதா ஐ.பி.எல். போட்டி…!!

MANIMARAN M

விளையாட்டுத்துறையில் விஸ்வரூபம் எடுக்கும் கொரோனா… பிரபல கால் பந்தாட்ட வீரருக்கு தொற்று உறுதி…!

NEWSKADAI

டெல்லி அணியின் பந்து வீச்சுக்கு பயந்து ஒடுங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ்…

MANIMARAN M

“தல” தோனி திடீர் ஓய்வை அறிவிக்க காரணம் இவர்களா?… பரபரப்பு பின்னணி…!!

MANIMARAN M

அடித்து ஆடியும் பரிதாபமான தோல்வி… விரட்டிப் பிடித்து வெற்றிக் கனியை பறித்த டெல்லி…

MANIMARAN M

ராஜஸ்தான் ராயல்ஸ் இடம் போராடி தோற்ற சென்னை சூப்பர் கிங்ஸ்

MANIMARAN M