Newskadai.com
விளையாட்டு

அதிரடி காட்டிய மும்பை இந்தியன்ஸ்… திணறிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ்…

ipl kkr vs mi
Share this:

ஐபிஎல் தொடரில் 32 வது போட்டியில் கொல்கத்தா நைட் ரைட்ர்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் அபுதாபியில் மோதின. டாஸ் வென்ற கொல்கத்தா பேட்டிங் தேர்வு செய்து களத்தில் இறங்கியது. ஆரம்பத்திலேயே தடுமாற்றம் கண்டது கேகேஆர் அணி.

ipl kkr vs mi

மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்து வீச்சுக்கு சொற்ப ரன்களே எடுத்து ஓவர்களை வீணடித்தனர்.மோசமான பேட்டிங்கால் கொல்கத்தா அணி வரிசையாக விக்கெட்டுகளை இழந்ததது. திரிப்பாதி 7 ரன்களுக்கும், சுப்மான் கில் 21 ரன்களுக்கும் அவுட்டானார்கள்.

ipl kkr vs mi

நிதிஷ் ராணா 5 ரன்களும், தினேஷ் கார்த்திக் 4 ரன்களும், ரசல் வெறும் 12 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட் ஆனார்கள். மளமளவென சரிந்த விக்கெட்டினால் கொல்கத்தா அணி 61 ரன்களுக்கு 5 விக்கெட்டை இழந்து கடுமையாக திணறியது. இயான் மோர்கன், பேட் கும்மின்ஸ் மட்டும் களத்தில் இருந்தனர்.

ipl kkr vs mi

100 ரன்களுக்குள் கொல்கத்தா வீழ்ந்துவிடும் என்று கருதப்பட்ட நிலையில், இவர்கள் இருவரும் அணியை சரிவில் இருந்து மீட்டனர். அதிரடியாக ஆடிய கும்மின்ஸ் 36 பந்தில் 53 ரன்கள் எடுத்தார். இதில் 2 சிக்ஸ், 5 பவுண்டரி அடக்கம். இயான் மோர்கன் 29 பந்தில் 39 ரன்கள் எடுத்தார்.

ipl kkr vs mi

இதனால் சரிவில் இருந்து மீண்ட கொல்கத்தா 20 ஓவரில் 5 விக்கெட்டை இழந்து 148 ரன்கள் எடுத்தது. 149 என்ற இலகுவான இலக்குடன் களமிறங்கியது மும்பை அணி. பேட்டிங்கில் சொதப்பியது போல் பந்து வீச்சிலும் சொதப்பியது கேகேஆர். ரோஹித் – டீ காக் இணை துவக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கி தொடக்கத்திலேயே அதிரடியை காட்டினர்.

ipl kkr vs mi

முதல் பத்து ஓவரிலேயே மும்பை அணி எளிதாக 90 ரன்களை கடந்தது. முதல் 10 ஓவர்களில் விக்கெட் எடுக்க முடியாமல் திணறியது கொல்கத்தா அணி. 36 பந்தில் 35 ரன்கள் எடுத்து ரோஹித் அவுட்டானார். அடுத்து களமிறக்கப்பட்ட சூர்யா குமார் யாதவ் 10 ரன்களில் அவுட் ஆனார்.

ipl kkr vs mi

மேலும் படிக்க : நீட் தேர்வில் தமிழகத்திலேயே அதிக மதிப்பெண் பெற்ற சென்னை மாணவி… வெற்றிக்கான காரணம் என்ன தெரியுமா?

களத்தில் அதிரடி காட்டி விளையாடி டீ காக் 44 பந்தில் 78 ரன்கள் எடுத்தார். வெற்றி இலக்கான 149 ரன்களை 16.5 ஓவரில் எடுத்து மும்பை அணி வெற்றி பெற்றது. கொல்கத்தா கேப்டன் தினேஷ் கார்த்திக் பதவி விலகி, இயான் மோர்கன் கேப்டனாக பதவி ஏற்று முதல் போட்டியிலேயே தோல்வி அடைந்துள்ளனர்.


Share this:

Related posts

“Home of Dhoni Fan”- “விசில் போடு”- வெறித்தனமான ரசிகரின் ஒரு சூப்பர் டூப்பர் காணிக்கை…

MANIMARAN M

திக்..திக்..திக்.. தேவை ஒரு பந்தில் ஒரு ரன்… அடித்து நொறுக்கிய பஞ்சாப்… அசந்து போன பெங்களூர்…

MANIMARAN M

என்னதான் ஆச்சு சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு? தொடர் தோல்வி…!!

MANIMARAN M

பேட்டிங்கை தேர்வு செய்த ஹைதராபாத்..!! பவுலிங்கில் மிரட்டிய கொல்கத்தா..!! முதல் வெற்றியை பதிவு செய்த அணி…

MANIMARAN M

“மற்ற ஐபிஎல்-யை விட இது ரொம்ப ஸ்பெஷலானது”… புது விளக்கம் கொடுத்த பாஜக எம்.பி…!

NEWSKADAI

எல்லாம் இருந்தும் வெற்றியை கோட்டை விட்ட டெல்லி கேபிடல்ஸ் அணி

MANIMARAN M