Newskadai.com
விளையாட்டு

சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியில் 5 பேருக்கு கொரோனா… அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!

Share this:

அடுத்த மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தில் IPL நடைபெறவுள்ளது. இதனையொட்டி இப்போடிகளில் விளையாட கடந்த வாரம் கேப்டன் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி துபாய் சென்றுள்ளது. இதில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி வீரர்கள், பயிற்சியாளர்கள், உதவி பணியாளர்கள் உள்ளிட்ட 51 பேர் சென்றுள்ளனர். துபாய் சென்ற அனைவருக்கும் அமீரக விதிமுறைபடி அங்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அனைவரும் 6 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்துல் செய்யப்பட்டனர்.

இதைத் தொடர்ந்து பரிசோதனையில் ஒரு உதவி பந்து வீச்சாளர் மற்றும் 4 பணியாளர்கள் என மொத்தம் 5 பேருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அனைவரையும் மேலும் ஒரு வாரம் தனிமைப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனை ஐபிஎல் நிர்வாக குழுவும் உறுதி செய்துள்ளது. இந்நிலையில் ஐபிஎல் போட்டிகள் நடைபெறுமா என்ற சந்தேகம் கிரிக்கெட் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.


Share this:

Related posts

”ஐபிஎல் போட்டியிலிருந்து இதனாலதான் விலகினேன்..!!” சுரேஷ் ரெய்னா அதிரடி…!!

NEWSKADAI

“எல்லா புகழும் தமிழக மக்களுக்கே”… கேல் ரத்னா விருது பெற்ற சேலம் மாரியப்பன் பெருமிதம்…

THAVAMANI NATARAJAN

2020 IPL கொண்டாட்டம் : போட்டி அட்டவணை வெளியீடு…

MANIMARAN M

“தல தல தான்” புகழ்ந்து தள்ளிய சைமன்….

MANIMARAN M

சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்கு அடுத்த அதிர்ச்சி… IPL-லிருந்து விலகிய முக்கிய வீரர்…!!

MANIMARAN M

சிஎஸ்கே உடன் மீண்டும் இணைந்த நட்சத்திர வீரர்… விசில் போட்டு கொண்டாடும் சென்னை ரசிகர்கள்…

MANIMARAN M