Newskadai.com
விளையாட்டு

திக்..திக்..திக்.. தேவை ஒரு பந்தில் ஒரு ரன்… அடித்து நொறுக்கிய பஞ்சாப்… அசந்து போன பெங்களூர்…

IPL RCBvsKXIP
Share this:

2020 ஐபிஎல் தொடரின் 31 வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி ஷார்ஜாவில் மைதானத்தில் மோதின. டாஸ் வென்ற பெங்களூர் அணி பேட்டிங் தேர்வு செய்தது. பெங்களூர் அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக ஆரோன் பின்ச், தேவ்தத் படிக்கல் களமிறங்கினர்.

IPL RCBvsKXIP

ஆரோன் பின்ச் நிதானமாக ஆடினார். படிக்கல் அதிரடி ஆட்டம் ஆடி 12 பந்துகளில் 18 ரன்கள் சேர்த்து வெளியேறினார். பின்ச் 20 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் வாஷிங்டன் சுந்தர் நிதான ஆட்டம் ஆடினர். சுந்தர் 14 பந்துகளில் 13 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

IPL RCBvsKXIP

அடுத்து ஏபி டிவில்லியர்ஸ் களமிறங்குவார் என எதிர்ப்பார்த்த நிலையில் சிவன் துபே களமிறக்கப்பட்டார். வழக்கமான பெங்களூர் அணியின் அதிரடி ஆட்டத்தை இந்த போட்டியில் காண முடியவில்லை. துபேவும் 19 பந்துகளில் 23 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

IPL RCBvsKXIP

ரசிகர்கள் எதிர்பார்த்த டிவில்லியர்ஸ் ஆறாவது ஆட்டக்காரராக களமிறங்கினார். அனைவரின் எதிர்ப்பார்பையும் தவிடு பொடியாக்கி 2 ரன்களில் டிவில்லியர்ஸ் ஆட்டமிழந்தார். 18வது ஒவரில் 48 ரன்களில் கோலியும் ஆட்டமிழந்தார். அடுத்து இறங்கிய கிறிஸ் மோரீஸ் அதிரடி ஆட்டம் ஆடினார்.

IPL RCBvsKXIP

8 பந்துகளில் 25 ரன்கள் குவித்தார். மோரீஸின் அதிரடி ஆட்டத்தால் பெங்களூர் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்தது. விளையாடிய ஏழு போட்டிகளில் ஒன்றில் மட்டும் வெற்றி பெற்றிருந்த பஞ்சாப் அணி இந்த போட்டியில் 172 ரன்கள் என்ற சவாலான இலக்குடன் களமிறங்கியது.

IPL RCBvsKXIP

பஞ்சாப் அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் துவக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர். மயங்க் அதிரடி ஆட்டம் ஆடி பஞ்சாப் அணிக்கு சிறப்பான வெற்றி பாதையை அமைத்துக் கொடுத்தார். 25 பந்துகளில் 45 ரன்கள் குவித்துக் கொடுத்து ஆட்டமிழந்தார் மயங்க்.

IPL RCBvsKXIP

அடுத்து வந்த கிறிஸ் கெயில் துவக்கத்தில் மிக நிதானமாக ஆடினார். ராகுல் மற்றும் கெயில் இணை பின்னர் அதிரடி காட்டினர். ரன்கள் குவிந்து இலக்கை நெருங்கினர். 2 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று கடைசி ஓவரில், முதல் மூன்று பந்துகளில் 1 ரன் மட்டுமே எடுத்தார் கெயில்.

IPL RCBvsKXIP

கடைசி ஓவரின் ஐந்தாவது பந்தில் கிறிஸ் கெயில் ரன் அவுட் ஆனார். 53 ரன்களில் கெயில் ஆட்டமிழந்தார். ஒரு பந்தில் ஒரு ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் நிக்கோலஸ் பூரன் களமிறங்கினார். சஹலின் இறுதி பந்தில் பூரன் சிக்ஸ் அடித்தார். பஞ்சாப் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூர் அணியினை வென்றது. இந்த தொடரில் பஞ்சாப் அணியின் 2 வது வெற்றி.


Share this:

Related posts

வெறித்தனமாக ஆடிய சென்னை : மிரண்டுபோய்த் தோற்ற ஹைதராபாத்…

MANIMARAN M

குஷியான செய்தி: லாக்டவுனை தவிடு பொடியாக்கிய ஐபிஎல்… செப்டம்பரில் போட்டிகள் தொடக்கம்!!

NEWSKADAI

சூப்பர் ஓவரும் டை : தெறிக்கவிட்ட பஞ்சாப்… வெற்றி விளிம்பில் சறுக்கிய மும்பை…

MANIMARAN M

“Home of Dhoni Fan”- “விசில் போடு”- வெறித்தனமான ரசிகரின் ஒரு சூப்பர் டூப்பர் காணிக்கை…

MANIMARAN M

சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியில் 5 பேருக்கு கொரோனா… அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!

MANIMARAN M

“தல தல தான்” புகழ்ந்து தள்ளிய சைமன்….

MANIMARAN M