Newskadai.com
விளையாட்டு

வெற்றியின் பக்கம் வந்த ராஜஸ்தான்… மிரட்டல் பந்துவீச்சால் தோற்கடித்த டெல்லி…

ipl DCvsRR
Share this:

2020 ஐபிஎல் தொடரின் 30வது லீக் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. துபாயில் நடந்த இந்த போட்டியில் டெல்லி அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. டெல்லியின் துவக்க ஆட்டக்காரர்களாக தவானும், ப்ரித்வி ஷாவும் களமிறங்கினர்.

ipl DCvsRR

ஆர்ச்சரின் ஸ்விங் பந்துவீச்சில் ப்ரித்வி ஷா முதல் ஓவரின் முதல் பந்தில் டக் அவுட் ஆனார். அடுத்து வந்த ரஹானே 9 பந்துகளில் 2 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். அதிரடி ஆட்டம் ஆடிய தாவான் 33 பந்துகளில் 57 ரன்கள் குவித்தார். அவருக்கு இணையாக களத்தில் ஸ்ரேயாஸ் ஐயர் நிதானமாக ஆடி 43 பந்துகளில் 53 ரன்கள் எடுத்துக் கொடுத்தார்.

ipl DCvsRR

ராஜஸ்தான் அணி கட்டுக் கோப்பான பந்து வீச்சினால் டெல்லி அணியின் ரன்களை கட்டுப்படுத்தினர். ஸ்டோய்னிஸ் 19 பந்துகளில் 18 ரன்களும், அலெக்ஸ் கேரி 13 பந்துகளில் 14 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். அக்சர் பட்டேல் 7 ரன்கள் எடுத்தார். 20 ஓவர்களில் டெல்லி அணி 7 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் எடுத்திருந்தது.

ipl DCvsRR

162 ரன்கள் இலக்கோடு அடுத்த களமிறங்கியது ராஜஸ்தான் அணி. பட்லர் துவக்க ஆட்டக்காரராக அதிரடி ஆட்டம் ஆடி 9 பந்துகளில் 22 ரன்கள் எடுத்தார். அடுத்து வந்த ஸ்மித் 1 ரன் மட்டுகே எடுத்து அவுட் ஆனார். ஸ்டோக்ஸ் 41 ரன்களும், உத்தப்பா 32 ரன்களும், சாம்சன் 25 ரன்களும் எடுத்துக் கொடுத்தனர்.

ipl DCvsRR

மேலும் படிக்க : இந்த மாவட்டங்களில் மட்டும் அடங்காத கொரோனா… தமிழகம் முழுக்க இன்றைய நிலை..!!

வெற்றியை நோக்கிய ஆட்டத்தில் சென்றுக் கொண்டிருந்த ராஜஸ்தான் அணி அடுத்தடுத்து விக்கெட்களி இழந்து தடுமாற்றாம் அடைந்தனர். கடந்த போட்டியில் ராஜஸ்தான் அணியை கரை சேர்த்த திவாட்டியா இந்த முறை ஏமாற்றம் அளித்தார்.

ipl DCvsRR

6 பந்துகளில் 22 ரன்கள் தேவை என்ற கடைசி ஓவரில் திவாட்டியா கோபால் இணை 8 ரன்கள் மட்டுமே எடுத்து 13 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணியிடம் தோல்வியடைந்தனர். அதிரடி பந்து வீச்சில் கவனம் செலுத்திய ராஜஸ்தான் அணியின் மோசமான பேட்டிங்கால் வெற்றியின் அருகில் சென்றும் அதனை அடையமுடியாமல் தோல்வியை தழுவியது.


Share this:

Related posts

சன்ரைஸ் அணியை துவம்சம் செய்த ராயல் சேலஞ்சர்ஸ்..!!!

MANIMARAN M

அடித்து ஆடியும் பரிதாபமான தோல்வி… விரட்டிப் பிடித்து வெற்றிக் கனியை பறித்த டெல்லி…

MANIMARAN M

ப்ளே ஆப் போகுமா சென்னை அணி? எதிர்பார்த்த ரசிகர்கள்- ஏமாற்றிய தோனி…

MANIMARAN M

ராயல் சேலஞ்சர்ஸ் வெற்றிக்கு இதுதான் காரணமாம்… ஐபிஎல் 10வது ஆட்டத்தில் நடந்த அதிரடி

NEWSKADAI

20/20 மேட்சில் இன்னிங்ஸ் விளையாடிய சென்னை அணி – தெறிக்க விட்ட விராட் கோலி

MANIMARAN M

அதிரிபுதிரி IPL ஆரம்பம்… சென்னையுடன் மோதும் மும்பை…

MANIMARAN M