Newskadai.com
விளையாட்டு

வெறித்தனமாக ஆடிய சென்னை : மிரண்டுபோய்த் தோற்ற ஹைதராபாத்…

Ipl CSK vs SRH
Share this:

ஐபிஎல் டி.20 தொடரின் 29ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின. டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

Ipl CSK vs SRH

ஐபிஎல் 2020 சீசனில் முதலில் பேட்டிங் வாய்ப்பு கிடைக்காத நிலையில் இந்த போட்டியில் முதன் முறையாக பேட்டிங் செய்தது சிஎஸ்கே. துவக்க வீரராக களமிறங்கிய இளம் வீரர் சாம் கர்ரான் 21 பந்துகளில் 31 ரன்கள் எடுத்துக் கொடுத்தார். பாப் டுபிளெசிஸ் டக் அவுட் ஆனார்.

Ipl CSK vs SRH

அடுத்து வாட்சன் – ராயுடு இணைந்து மத்திய ஒவர்களில் சுழற் பந்துவீச்சை எதிர்கொண்டு சிஎஸ்கே அணியை ஓவருக்கு 7 ரன்கள் என்ற ரன் ரேட்டில் தக்க வைத்து ஆட்டமிழந்தனர். வாட்சன் 42, ராயுடு 41 ரன்கள் எடுத்தனர். கடைசி ஓவர்களில் தோனி, ஜடேஜா அதிரடி ஆட்டம் ஆடினர்.

Ipl CSK vs SRH

தோனி 13 பந்துகளில் 21 ரன்களும், ஜடேஜா 10 பந்துகளில் 25 ரன்களும் எடுத்துக் கொடுத்தனர். 20 ஓவர்களில் சிஎஸ்கே அணி 167 ரன்கள் குவித்தது. 168 எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு களமிறங்கியது ஹைதராபாத் அணி. துவக்க வீரர்களாக டேவிட் வார்னரும் ஜானி பேர்ஸ்டோவும் களமிறங்கினர்.

Ipl CSK vs SRH

9 ரன்களில் ஆட்டமிழந்து வார்னர் ஏமாற்றமளித்தார். அடுத்து வந்த மணிஷ் பாண்டே 4 ரன்களில் ரன் அவுட் ஆனார். சென்னை அணியின் அசுர பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் ஹைதராபாத் அணி திணறியது. நிதானமாக ஆடிய ஜானி பேர்ஸ்டோ 23 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஜடேஜா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

Ipl CSK vs SRH

கேன் வில்லியம்சன் தனி ஆளாக போராடி 39 பந்துகளில் 57 ரன்கள் எடுத்தார். அவர் 18வது ஓவர் வரை களத்தில் நின்று ஹைதராபாத் அணியை வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். வில்லியம்சன் ஆட்டமிழந்த பின் ரஷித் கான் 8 பந்துகளில் 14 ரன்கள் எடுத்து மிரட்டினார்.

Ipl CSK vs SRH

மேலும் படிக்க “Home of Dhoni Fan”- “விசில் போடு”- வெறித்தனமான ரசிகரின் ஒரு சூப்பர் டூப்பர் காணிக்கை…

கடைசி ஓவரில் 22 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலையில், 1 ரன் மட்டுமே எடுத்து 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. தோனி இந்தப் போட்டியில் தன் கேப்டன்சியில் சிறப்பாக செயல்பட்டு வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார்.


Share this:

Related posts

வெற்றியின் பக்கம் வந்த ராஜஸ்தான்… மிரட்டல் பந்துவீச்சால் தோற்கடித்த டெல்லி…

MANIMARAN M

#IPL : சிஎஸ்கேவின் மோசமான பேட்டிங்… வெற்றியை தட்டிப் பறித்த ராஜஸ்தான்…

MANIMARAN M

ஐபிஎல் வரலாற்றில் சாதனை: நெருக்கடி கொடுத்த பஞ்சாப், சிக்சர் மழை பொழிந்த ராஜஸ்தான்

NEWSKADAI

டெல்லி அணியின் தொடர் வெற்றியை தடுத்து நிறுத்திய வார்னரின் கேப்டன்ஷிப்…

MANIMARAN M

ராஜஸ்தான் ராயல்ஸ் இடம் போராடி தோற்ற சென்னை சூப்பர் கிங்ஸ்

MANIMARAN M

பேட்டிங்கை தேர்வு செய்த ஹைதராபாத்..!! பவுலிங்கில் மிரட்டிய கொல்கத்தா..!! முதல் வெற்றியை பதிவு செய்த அணி…

MANIMARAN M