Newskadai.com
விளையாட்டு

ராஜஸ்தான் ராயல்ஸ் இடம் போராடி தோற்ற சென்னை சூப்பர் கிங்ஸ்

Share this:

முன்பு நமக்கு வெற்றியைத் தந்த அதே ஆடுகளம். அதே வீரர்கள், திறமைவாய்ந்த அதே தளபதி மற்றும் நிரூபிக்கப்பட்ட வெற்றிக்கான வியூகங்கள் அனைத்துடனும் புதிய எதிரி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்த்து களத்தில் இறங்கியது சென்னை சூப்பர் கிங்ஸ். டாஸ் ஜெயித்த சென்னை அணி வழக்கம்போல டாசில் வென்று எதிரணியை (ராஜஸ்தான் ராயல்ஸ்) பேட்டிங் செய்ய அழைத்தது.

நமது நிரூபிக்கப்பட்ட வெற்றிக்கான வழிமுறையான நாலு ஸ்பின் பவுலர்கள் என்ற வியூகத்தை ராஜஸ்தான் அணி வீரர்கள் அசால்டாக கையாண்டனர். அதிலும் சஞ்சு சாம்சன் ருத்ர தாண்டவம் ஆடினார். அவரை அவுட்டாக்க நினைத்த சென்னை அணி பவுலர்கள் அவரை கட்டுப்படுத்தவும் தவறிவிட்டார்கள். நிதானத்துக்கு பேர் போன நம் தல தோனி கூட கொஞ்சம் பதட்டம் அடைந்ததை பார்க்க முடிந்தது.

சஞ்சு சாம்சன் 32 பந்துகளில் 74 ரன்கள் குவித்து ராஜஸ்தான் அணியை ராஜபாட்டையில் அழைத்துச் சென்றார். ராஜஸ்தான் ராயல்ஸ் 7 விக்கெட் இழப்பிற்கு 216 ரன்கள் எடுத்திருந்தது. 217 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட்டிங்கை துவங்கிய நம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் வழக்கம்போல சொதப்பலான ஆட்டம் ஆடினர்.

முரளி விஜய் 21 ரன்களிலும் வாட்சன் 33 ரன்களி லும் வெளியேறினர். ராஜஸ்தான் அணியின் பவுலர்கள் சீரான இடைவெளியில் சென்னை அணியின் விக்கெட்டுகளை வீழ்த்திய வண்ணம் இருந்தனர். ராஜஸ்தான் அணியின் சஞ்சு சாம்சன் போல நமது சென்னை அணியில் டூ பிளசிஸ் அதிரடி காட்டி போராடினார். அவர் 37 பந்துகளில் 72 ரன்கள் எடுத்தார். தல தோனியின் பேட்டிங்கை பார்க்கும் வாய்ப்பு அவரது ரசிகர்களுக்கு கிடைத்தது.

கடைசி ஓவரில் டோனி அடித்த மூன்று இமாலய சிக்ஸர்கள் அவரது பார்ம் என்ன என்பதை அனைவருக்கும் உணர்த்தியது. ஆனால் 20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 200 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியதால் அந்த 3 சிக்சர்களும் அதற்கான முக்கியத்துவத்தை ரசிகர்களிடம் பெறவில்லை. வெற்றியை விட தோல்விகள் தான் அதிக பாடங்களை கற்றுக் கொடுக்கும்.

இந்த தோல்வி நமது அணியின் பலவீனம் என்ன என்பதை நமக்கு கண்ணாடிபோல் காட்டிவிட்டது. நாம் வீழ்த்த முடியாத அணி அல்ல என்ற உண்மையை நமக்கு உணர்த்தி விட்டது. அணியில் தேவையான மாற்றங்களைச் செய்து இனி வரும் போட்டிகளில் நமக்கு வெற்றிகளை பரிசளிப்பார் நம்ம தல தோனி என நம்பிக்கையுடன் காத்திருப்போம்.


Share this:

Related posts

அதிரடி காட்டிய மும்பை இந்தியன்ஸ்… திணறிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ்…

MANIMARAN M

“தோனி வேற லெவல் பிளேயர்” தோணியை புகழ்ந்து தள்ளிய கவாஸ்கர்

MANIMARAN M

குஷியான செய்தி: லாக்டவுனை தவிடு பொடியாக்கிய ஐபிஎல்… செப்டம்பரில் போட்டிகள் தொடக்கம்!!

NEWSKADAI

பேட்டிங்கை தேர்வு செய்த ஹைதராபாத்..!! பவுலிங்கில் மிரட்டிய கொல்கத்தா..!! முதல் வெற்றியை பதிவு செய்த அணி…

MANIMARAN M

கேப்டன் பதவியிலிருந்து விலகினார் தினேஷ் கார்த்திக்… கேகேஆர் அணியில் என்னதான் நடக்கிறது..!!

MANIMARAN M

20/20 மேட்சில் இன்னிங்ஸ் விளையாடிய சென்னை அணி – தெறிக்க விட்ட விராட் கோலி

MANIMARAN M