Newskadai.com
விளையாட்டு

சன்ரைஸ் அணியை துவம்சம் செய்த ராயல் சேலஞ்சர்ஸ்..!!!

Share this:

ஐபிஎல் தொடரில் நேற்றைய ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதின. டாஸ் வென்ற ஐதராபாத் அணி பெங்களூர் அணியை பேட்டிங் செய்யும்படி கூறியது. அந்த அணியின் துவக்க வீரர்கள் சிறப்பான துவக்கம் அளித்தனர்.அறிமுக வீரர் தேவ்தத் படிக்கல் அதிரடி காட்டினார். 56 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். ஆரோன் பின்ச் 29 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

அடுத்து விராட் கோலி – டிவில்லியர்ஸ் இணைந்து பேட்டிங் செய்ய வந்தனர்.பெங்களூர் ரசிகர்கள் கோலி – டிவில்லியர்ஸ் இருவரும் சேர்ந்து கடந்த காலங்களில் எதிரணியை துவம்சம் செய்தது போல இப்போதும் எந்திரி அணியை பிரித்து மேய போகிறார்கள் என உற்சாகம் அடைந்தனர். ஆனால், விராட் கோலி ஏமாற்றம் அளித்தார்.13 பந்துகளில் 14 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.ஆனால் டிவில்லியர்ஸ் பெங்களூர் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தார்.

19வது ஓவரில் சந்தீப் சர்மா பந்துவீச்சில் அடுத்தடுத்து இரண்டு சிக்ஸர்களை பறக்கவிட்டார். அவர் 30 பந்துகளில் 51 ரன்கள் குவித்தார். பெங்களூர் அணி 20 ஓவர்களில் 163 ரன்கள் குவித்தது. 164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடத் தொடங்கிய ஐதராபாத் அணி நிதானமாக முன்னேறியது. ஒரு கட்டத்தில் ஹைதராபாத் அணி வெற்றி பெற்றுவிடும் என்ற நிலைக்கு வந்தது. ஐதராபாத் அணியின் வெற்றி கனவை பெங்களூர் அணி பந்துவீச்சாளர் சாஹல் தவிடு பொடியாக்கினார்.

அவரது பந்து வீச்சில் ஹைதராபாத் அணியின் முக்கிய விக்கெட்டுகள் வரிசையாக விழுந்தன. மணீஷ் பாண்டே , ஜானி பிரைஸ்டோ, விஜய் சங்கர் விக்கெட்டுகளை வீழ்த்தி ஐதராபாத் அணியின் வெற்றி வாய்ப்பை தட்டிப் பறித்தார். இறுதியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 19.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 153 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது.


Share this:

Related posts

கிரிக்கெட் ரசிகர்களுக்கு மற்றுமொரு விருந்து…. பெண்கள் T-20 போட்டியை விரைவில் நடத்த முடிவு…!!

MANIMARAN M

”ஓடவும் மாட்டேன் ஒளியவும் மாட்டேன்”… கடினமான சூழலையும் கச்சிதமாக அணுகும் தோனி ஆவேசம்..!!

NEWSKADAI

20/20 மேட்சில் இன்னிங்ஸ் விளையாடிய சென்னை அணி – தெறிக்க விட்ட விராட் கோலி

MANIMARAN M

சீனப் பகையால் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு ஏற்பட்ட பல கோடி இழப்பு

MANIMARAN M

பேட்டிங்கை தேர்வு செய்த ஹைதராபாத்..!! பவுலிங்கில் மிரட்டிய கொல்கத்தா..!! முதல் வெற்றியை பதிவு செய்த அணி…

MANIMARAN M

சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்கு அடுத்த அதிர்ச்சி… IPL-லிருந்து விலகிய முக்கிய வீரர்…!!

MANIMARAN M