Newskadai.com
விளையாட்டு

எல்லாம் இருந்தும் வெற்றியை கோட்டை விட்ட டெல்லி கேபிடல்ஸ் அணி

Share this:

ஐபிஎல் (2020) தொடரின் 27வது லீக் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. டாஸ் ஜெயித்த டெல்லி அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. டெல்லி அணிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தது மும்பை அணி. டெல்லி அணியின் நட்சத்திர துவக்க ஆட்டக்காரர் ப்ரித்வி ஷாவை 5 ரன்களில் வெளியேற்றினர்.

தொடர்ந்து ரஹானே 15 ரன்களிலும், ஸ்ரேயாஸ் ஐயர் 48 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். ஸ்டோய்னிஸ் 13 ரன்களில் ரன் அவுட் ஆனதால் டெல்லி அணியின் ஸ்கோர் வேகம் கணிசமாக குறைந்தது. தவான் கடைசிவரை நிதான ஆட்டத்தை கடைபிடித்து 69 ரன்கள் எடுத்தார். 20 ஓவர் முடிவில் டெல்லி கேபிடல்ஸ் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் மட்டுமே எடுத்தது. 

விக்கெட்டுகள் கையில் இருந்தும் டெல்லி அணி கடைசி ஓவர்களில் அதிரடி காட்டாமல் விளையாடியது ஏன் என்ற கேள்வி அனைவர் மனதிலும் எழுந்தது. 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி அளித்தார் ரோஹித் சர்மா. அவர் 12 பந்துகளில் 5 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்.

அடுத்து டி காக் – சூர்யகுமார் யாதவ் இணைந்து ஆடினர். 53 ரன்கள் எடுத்த நிலையில் டி காக் ஆட்டமிழந்தார். அவர்கள் சென்ற பின் இஷான் கிஷன் அதிரடி ஆட்டம் ஆடி 22 ரன்கள் எடுத்தார். சூரியகுமார் 58 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஹர்திக் பாண்டியா டக் அவுட் ஆனார். கடைசி நேரத்தில் க்ருனால் பாண்டியா – பொல்லார்டு இணை அவசரப்படாமல் கடைசி ஓவர் வரை நீடித்து ஆடினர்.

அதனால், போட்டி கடைசி ஓவர் வரை நீண்டது. கடைசி ஓவரில் அதாவது 6 பந்துகளுக்கு 7 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது. இரண்டு பந்துகள் மீதம் இருந்த நிலையில் வெற்றி இலக்கை மிக எளிதாக எட்டிப் பிடித்தது மும்பை அணி. இறுதியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை வீழ்த்தி மும்பை அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் மும்பை அணி முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளது.


Share this:

Related posts

“ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயிட்ரா”… 54 வயதில் அதிரடியாக கம்பேக் கொடுக்க போகும் மைக் டைசன்…!

NEWSKADAI

IPL கொண்டாட்டம்… தோனி தலைமையில் ஐக்கிய அரபு அமீரகம் புறப்பட்டுச் சென்றது CSK அணி..

MANIMARAN M

பேட்டிங்கை தேர்வு செய்த ஹைதராபாத்..!! பவுலிங்கில் மிரட்டிய கொல்கத்தா..!! முதல் வெற்றியை பதிவு செய்த அணி…

MANIMARAN M

“தல” தோனி திடீர் ஓய்வை அறிவிக்க காரணம் இவர்களா?… பரபரப்பு பின்னணி…!!

MANIMARAN M

சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியில் 5 பேருக்கு கொரோனா… அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!

MANIMARAN M

வெறித்தனமாக ஆடிய சென்னை : மிரண்டுபோய்த் தோற்ற ஹைதராபாத்…

MANIMARAN M