Newskadai.com
விளையாட்டு

20/20 மேட்சில் இன்னிங்ஸ் விளையாடிய சென்னை அணி – தெறிக்க விட்ட விராட் கோலி

Share this:

ஐபிஎல்(2020) தொடரின் 25வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதின. டாஸ் ஜெயித்த பெங்களூர் அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார். பெங்களூர் அணியின் ஆரோன் பின்ச் , தேவ்தத் படிக்கல் இணை முதலில் களத்தில் இறங்கியது.

ஆரோன் பின்ச் அதிர்ச்சிகரமாக 2 ரன்னில் அவுட் ஆனார். சென்னை அணியின் பவுலிங் நேற்று வேறு விதமாக இருந்தது. 16-வது ஓவரில் தான் பெங்களூர் அணி 100 ரன்களை எட்டிப் பிடித்தது. அதுவரை பொறுமையாக விளையாடி வந்த பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டிங்கில் விஸ்வரூபம் எடுத்தார்.

கடைசி 4 ஓவர்களில் மட்டும் அதாவது 24 பந்துகளுக்கு 69 ரன்கள் எடுத்தது பெங்களூர் அணி. தடுமாறிய தனது அணியை வெற்றிகரமாக வெற்றிப் பாதைக்கு அழைத்து வந்த பெருமை விராட் கோலியை சேரும். ஒரு கேப்டனாக தனது கடமையை செவ்வனே செய்தார்.

விராட் கோலி 52 பந்தில் 4 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 90 ரன்களை குவித்து கடைசி வரை களத்தில் இருந்தார். படிக்கல் 33 ரன்கள், துபே 22 ரன்கள் எடுத்தனர். 20 ஓவர் முடிவில் பெங்களூர் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் எடுத்தது. 170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கியது சென்னை அணி.

இந்த இலக்கு எட்டிப் பிடித்துவிடும் இலக்குதான் என்பதால் சென்னை அணியின் ரசிகர்களும் தனது அணியின் வெற்றியைக் காண கண்விழித்து காத்திருந்தனர். ஆவலோடு காத்திருந்த சென்னை அணியின் ரசிகர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார் பெங்களூர் அணி பந்து வீச்சாளர் வாஷிங்டன் சுந்தர்.

சென்னை அணியின் நட்சத்திர தொடக்க வீரர்கள் டுப்ளெசிஸ் மற்றும் ஷேன் வாட்சன் ஆகிய இருவரையும் பவர்ப்ளேயில் தனது அடுத்தடுத்த ஓவர்களில் வீழ்த்தினார் வாஷிங்டன் சுந்தர். அதன்பின்னர் ராயுடு மற்றும் ஜெகதீஷன் ஆகிய இருவரும் பார்ட்னர்ஷிப் அமைத்து ஆடினர்.

இது 20 20 மேட்ச் என்பதை மறந்து இன்னிங்ஸ் போல விளையாடினர். இந்த ஐபிஎல் தொடரில் தனது முதல் போட்டியில் விளையாடிய ஜெகதீஷன் 33 ரன்களில் ஆட்டமிழக்க, அதன்பின்னர் தோனி 10 ரன்களிலும் சாம் கரன் ரன்னே அடிக்காமலும் ஆட்டமிழக்க, அவர்களை தொடர்ந்து ராயுடுவும் 42 ரன்களில் ஆட்டமிழந்தார்.

17 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 110 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. மீதமுள்ள 3 ஓவர்களில் அதாவது 24 பந்துகளில் 60 ரன்கள் என்ற இக்கட்டான சூழ்நிலைக்கு ஆளானது. அதன்பின்னர் ஜடேஜா மற்றும் பிராவோ ஆகிய இருவரும் தலா 7 ரன்களில் ஆட்டமிழந்தனர்.

20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 132 ரன்கள் மட்டுமே எடுத்தது சென்னை அணி. இதையடுத்து 37 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பெங்களூர் அணி, புள்ளி பட்டியலில் நான்காமிடத்திற்கு முன்னேறியுள்ளது.


Share this:

Related posts

குஷியான செய்தி: லாக்டவுனை தவிடு பொடியாக்கிய ஐபிஎல்… செப்டம்பரில் போட்டிகள் தொடக்கம்!!

NEWSKADAI

தொடர்ச்சியாக 5வது வெற்றி… பதற வைத்த பஞ்சாப்….!! திணறிப் போன கொல்கத்தா….!!

MANIMARAN M

அதிரடி காட்டிய மும்பை இந்தியன்ஸ்… திணறிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ்…

MANIMARAN M

பேட்டிங்கை தேர்வு செய்த ஹைதராபாத்..!! பவுலிங்கில் மிரட்டிய கொல்கத்தா..!! முதல் வெற்றியை பதிவு செய்த அணி…

MANIMARAN M

பந்து வீச்சில் அதிரடிக் காட்டி வென்ற பஞ்சாப்…. தொடர் விக்கெட்களை இழந்து தோல்வியை தழுவிய ஹைதராபாத்

MANIMARAN M

சூப்பர் ஓவரும் டை : தெறிக்கவிட்ட பஞ்சாப்… வெற்றி விளிம்பில் சறுக்கிய மும்பை…

MANIMARAN M