Newskadai.com
விளையாட்டு

#IPL : ஹைதராபாத்தின் ஆக்ரோஷத்தில் அடங்கிப்போன பஞ்சாப் அணி…!!

Share this:

ஐபிஎல்(2020) தொடரின் 22வது லீக் போட்டியில் நேற்றைய தினம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. ஹைதராபாத் அணியின் டேவிட் வார்னர் – ஜானி பேர்ஸ்டோ இணை அதிரடி துவக்கம் அளித்தது.

பிறகு இந்த இணை நங்கூரம் பாய்ச்சியது போல் நிலைத்து நின்று ஆடி பஞ்சாப் பந்துவீச்சை பஞ்சு பஞ்சாக ஆக்கியது. 16-வது ஓவரில் தான் இந்த இணை பிரிந்தது. வார்னர் 52, பேர்ஸ்டோ 97 ரன்கள் குவித்தனர். இவர்களுக்குப் பின் விளையாடிய ஹைதராபாத் வீரர்கள் ரன் எடுப்பதைவிட அவுட்டாவதையே விரும்பியதை போல் விளையாடினார்.

கடைசி 5 ஓவர்களில் ஹைதராபாத் அணி 41 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 201 எடுத்து பஞ்சாப் அணிக்கு சவால் விட்டது. 202 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி ஆரம்பம் முதலே தடுமாறியது. ஹைதராபாத் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது.

ராகுல் 11 ரன்கள், மயங்க் அகர்வால் 9 ரன்கள், சிம்ரன் சிங் 11 ரன்கள், மேக்ஸ்வெல் 7 ரன்கள், மந்தீப் சிங் 6 ரன்கள், முஜீப்புர் ரஹ்மான் 1 ரன் என பஞ்சாப் சிங்கங்கள் ஒற்றை இலக்க ரன்களில் வெளிநடப்பு செய்தனர். ஒரு சிங்கம் மட்டும் களத்தில் நின்று ஹைதராபாத்தை மிரட்டிக் கொண்டிருந்தது. நிக்கோலஸ் பூரன் தான் அது.

37 பந்துகளில் 77 ரன்கள் குவித்த அவர் தனது அணியை கரை சேர்க்க போராடினார். ஆனால், ஹைதராபாத் அணி பௌலர் ரஷித் கான் பந்துவீச்சில் வீழ்ந்தார். ரஷித் கான் இந்தப் போட்டியில் மிரட்டலாக பந்து வீசினார். 4 ஓவர்களில் 12 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார். பஞ்சாப் அணியின் கடைசி மூன்று பேட்ஸ்மேன்கள் ஷமி, கோட்ரேல், அர்ஷ்தீப் சிங் ஆகியோர் டக் அவுட் ஆனார்கள்.

அனைத்து விக்கெட்டுகளையும் விரைவாக இழந்ததால் பஞ்சாப் அணியின் ஆட்டம் 16.5 ஓவரிலேயே முடிவுக்கு வந்தது. அனைத்து விக்கெட்களையும் இழந்து 132 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 69 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் ஹைதராபாத் அணி புள்ளிப் பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.


Share this:

Related posts

தோல்வியிலும் வரலாற்று சாதனை செய்த சிஎஸ்கே..!!

NEWSKADAI

20/20 மேட்சில் இன்னிங்ஸ் விளையாடிய சென்னை அணி – தெறிக்க விட்ட விராட் கோலி

MANIMARAN M

“தல தல தான்” புகழ்ந்து தள்ளிய சைமன்….

MANIMARAN M

”ஐபிஎல் போட்டியிலிருந்து இதனாலதான் விலகினேன்..!!” சுரேஷ் ரெய்னா அதிரடி…!!

NEWSKADAI

விளையாட்டுத்துறையில் விஸ்வரூபம் எடுக்கும் கொரோனா… பிரபல கால் பந்தாட்ட வீரருக்கு தொற்று உறுதி…!

NEWSKADAI

“தோனி வேற லெவல் பிளேயர்” தோணியை புகழ்ந்து தள்ளிய கவாஸ்கர்

MANIMARAN M