Newskadai.com
விளையாட்டு

விக்கெட்டுகள் கையில் இருந்தும் வெற்றியை கோட்டை விட்ட சென்னை சூப்பர் கிங்ஸ்..!!!

Share this:

ஐபிஎல் (2020) தொடரின் 21 வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற கொல்கத்தா பேட்டிங் தேர்வு செய்தது. சென்னை அணியின் பவுலிங் ஆரம்பத்தில் எடுபடவில்லை. கொல்கத்தா அணியினர் அடித்து விளையாடினர்.

போக போக சென்னை அணி பந்து வீச்சாளர்களின் கட்டுப்பாட்டில் கொல்கத்தா அணி கட்டுண்டது.சிஎஸ்கேவின் பவுலர்கள் நன்றாக பந்து வீசி விக்கெட் எடுத்தனர். கரன் சர்மா 25 ரன்கள் மட்டுமே கொடுத்து இரண்டு விக்கெட் எடுத்தார். சர்த்துல் தாக்கூரும் மிக துல்லியமான லென்தில் பவுலிங் செய்து 2 விக்கெட் எடுத்தார்.

கடைசி கட்டத்தில் சாம் கரனும் சரியாக பவுலிங் செய்து 2 விக்கெட் எடுத்தார். அதோடு இவரின் 19வது ஓவரும் சிறப்பாக அமைந்தது. கடைசி ஓவரில் பிராவோ பிரமிக்க வைத்தார். அந்த ஓவரில் மட்டும் இரண்டு விக்கெட் ஒரு ரன்அவுட். பவர்பிளே முடிவில் 190 ரன்களை கடக்கும் என்ற எதிர்ப்பார்ப்பை கிளப்பிய கொல்கத்தா அணியால் 20 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 167 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணிக்கு வாட்சன் – பாப் டுபிளெசிஸ் இணைஅதிரடி துவக்கம் அளித்தது. ராயுடு, ஷேன் வாட்சன் ரன் குவித்து வந்தனர். ஓவருக்கு 9 ரன்கள் என்ற அளவில் ரன் எடுத்து வந்தனர். வாட்சன் 50 ரன்கள் ராயுடு 30 ரன்கள் எடுத்திருந்தனர்.

முதல் 11 ஓவர்களில் சிறப்பாக விளையாடிய சென்னை அணி கடைசி 9 ஓவர்களில் சொதப்பலாக ஆடியது. சுனில் நரைன், ரஸ்ஸல் பந்துவீச்சில் ரன்கள் எடுக்க முடியாமல் திணறியது. தோனி அடித்து ஆட முயற்சி செய்தும் ரன் எடுக்க முடியவில்லை அவர் 11 ரன்களில் ஆட்டமிழந்தார்.

கடைசி 3 ஓவர்களில் 39 ரன்கள் தேவை என்ற நிலையில், ஜாதவ் டாட் பால் ஆடி சென்னை அணியை தோல்வி பள்ளத்தாக்கில் தள்ளினார். சிஎஸ்கே 157 ரன்கள் மட்டுமே எடுத்து 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியுடனான போட்டியில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை மீண்டும் ஏற்படுத்தியிருந்த சென்னை அணி நேற்றைய போட்டியில் சொதப்பலாக விளையாடி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகர்களை மீண்டும் ஏமாற்றத்தில் தள்ளியது.


Share this:

Related posts

”ஐபிஎல் போட்டியிலிருந்து இதனாலதான் விலகினேன்..!!” சுரேஷ் ரெய்னா அதிரடி…!!

NEWSKADAI

சிஎஸ்கே ஒரு மிகப்பெரிய “ஓட்டை கப்பல்” தல தோனி ஓபன் டாக்…

MANIMARAN M

“ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயிட்ரா”… 54 வயதில் அதிரடியாக கம்பேக் கொடுக்க போகும் மைக் டைசன்…!

NEWSKADAI

அதிக ரன் வித்தியாசத்தில் பெங்களூரை வீழ்த்தி பட்டியலில் முதலிடம் பிடித்த டெல்லி அணி..!!!

MANIMARAN M

சூப்பர் ஓவரும் டை : தெறிக்கவிட்ட பஞ்சாப்… வெற்றி விளிம்பில் சறுக்கிய மும்பை…

MANIMARAN M

IPL கொண்டாட்டம் : “பாக்கத்தானே போறீங்க காளியோடு ஆட்டத்த, எடுடா வண்டிய… போடுடா விசில”… இம்ரான் தாஹிர் அதிரடி..

MANIMARAN M