Newskadai.com
விளையாட்டு

மிரள வைத்த மும்பை இந்தியன்ஸ்..!! அடுத்தடுத்து விக்கெட் இழந்த ராஜஸ்தான்..!!

Share this:

ஐபிஎல் (2020)தொடரின் 20-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் மற்றும் முன்னாள் சாம்பியன் ராஜஸ்தான் அணிகள் மோதின. ‘டாஸ்’ ஜெயித்த மும்பை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. மும்பை அணியின் துவக்க வீரர்களாக டி காக், ரோஹித் சர்மா களமிறங்கினர்.

முந்தைய போட்டியில் சிறப்பாக ஆடிய டி காக் இந்தப் போட்டியில் 23 ரன்கள் மட்டுமே எடுத்தார். ரோஹித் சர்மா 35 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மும்பை அணி பேட்டிங்கில் அதிரடி காட்டியது. சூர்யகுமார் யாதவ் 79 ரன்களுடனும் ஹர்திக் பாண்ட்யா 30 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

முதலில் பேட் செய்த மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் அணி 4 விக்கெட் இழப்புக்கு 193 ரன்கள் குவித்தது. தொடர்ந்து 194 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய ராஜஸ்தான் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது. ஆனாலும் முழு மூச்சுடன் வெற்றிக்கு போராடிய தொடக்க வீரர் ஜோஸ் பட்லர் 70 ரன்களில், (44 பந்து, 4 பவுண்டரி, 5 சிக்சர்) பொல்லார்ட்டின் அற்புதமான கேட்சில் ஆட்டமிழந்தார். 

முடிவில் ராஜஸ்தான் அணி 18.1 ஓவர்களில் 136 ரன்னில் சுருண்டது. இதனால் மும்பை அணி 57 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மும்பை தரப்பில் பும்ரா 4 ஓவர்களில் 20 ரன்கள் மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.

ஐ.பி.எல்.-ல் அவரது சிறந்த பந்து வீச்சு இதுவாகும். டிரென்ட் பவுல்ட், பேட்டின்சன் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். மும்பை அணிக்கு இது 4-வது வெற்றியாகும். இதன் மூலம் புள்ளி பட்டியலில் மும்பை அணி முதலிடத்தை பிடித்தது.


Share this:

Related posts

டெல்லி அணியின் தொடர் வெற்றியை தடுத்து நிறுத்திய வார்னரின் கேப்டன்ஷிப்…

MANIMARAN M

சீனப் பகையால் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு ஏற்பட்ட பல கோடி இழப்பு

MANIMARAN M

சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியில் 5 பேருக்கு கொரோனா… அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!

MANIMARAN M

சிஎஸ்கே உடன் மீண்டும் இணைந்த நட்சத்திர வீரர்… விசில் போட்டு கொண்டாடும் சென்னை ரசிகர்கள்…

MANIMARAN M

13 வது ஐ.பி.எல் தொடர் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று துவங்குகிறது…

MANIMARAN M

இந்திய அணியின் முன்னாள் கேப்டனுக்கு மாரடைப்பு… ரசிகர்கள் பதற்றம்…!!!

MANIMARAN M