Newskadai.com
விளையாட்டு

அதிக ரன் வித்தியாசத்தில் பெங்களூரை வீழ்த்தி பட்டியலில் முதலிடம் பிடித்த டெல்லி அணி..!!!

Share this:

ஐபிஎல் (2020)தொடரின் 19வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதின. டாஸ் ஜெயித்த பெங்களூர் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்தது. ப்ரித்வி ஷா அதிரடி துவக்கம் அளித்தார். தவான் நிதானமாக 32 ரன்கள் சேர்த்தார்.

ப்ரித்வி ஷா 23 பந்துகளில் 42 ரன்கள் சேர்த்தார். ஸ்ரேயாஸ் ஐயர் 11 ரன்கள் மட்டுமே எடுத்து சிக்ஸ் அடிக்கும் முயற்சியில் ஆட்டமிழந்தார்.அடுத்து பண்ட் அதிரடி ஆட்டம் ஆடி 37 ரன்கள் சேர்த்தார். ஸ்டோய்னிஸ் கடைசி வரை களத்தில் நின்று 26 பந்துகளில் 53 ரன்கள் சேர்த்தார்.

டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்கள் குவித்தது. 197 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது பெங்களூர் அணி. தொடக்க ஆட்டக்காரர்கள் தேவ்தத் படிக்கல் 4 ரன்களிலும் பின்ச் 13 ரன்களிலும் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தனர்.

இதையடுத்து விளையாடிய கேப்டன் கோலி நிதானமாக விளையாடி தனது அணியை வீழ்ச்சிப் பாதையில் இருந்து அவர் 39 பந்துகளில் ஒரு சிக்ஸர், 2 பவுண்டரி உடன் 43 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து ஆடிய வில்லியர்ஸ், மொயின் அலி, வாஷிங்டன் சுந்தர், துபே, உடானா மற்றும் சிராஜ் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

இறுதியில் பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்கள் எடுத்தது. இதனால், டெல்லி கேப்பிடல்ஸ் அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தை நோக்கி முன்னேறியுள்ளது டெல்லி அணி.


Share this:

Related posts

2020 IPL கொண்டாட்டம் : போட்டி அட்டவணை வெளியீடு…

MANIMARAN M

20/20 மேட்சில் இன்னிங்ஸ் விளையாடிய சென்னை அணி – தெறிக்க விட்ட விராட் கோலி

MANIMARAN M

“ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயிட்ரா”… 54 வயதில் அதிரடியாக கம்பேக் கொடுக்க போகும் மைக் டைசன்…!

NEWSKADAI

அதிரடி காட்டிய மும்பை இந்தியன்ஸ்… திணறிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ்…

MANIMARAN M

ராஜஸ்தான் ராயல்ஸ் இடம் போராடி தோற்ற சென்னை சூப்பர் கிங்ஸ்

MANIMARAN M

நவ. 4-ல் மகளிர் T20 : கிரிக்கெட் ரசிகர்களுக்கு மற்றுமொரு விருந்து.. பிசிசிஐ அறிவிப்பு!

MANIMARAN M