Newskadai.com
விளையாட்டு

IPL : பேட்டிங்கில் தூள் கிளப்பிய டெல்லி – வெறியுடன் துரத்திய கொல்கத்தா

Share this:

ஐபிஎல்(2020) தொடரின் 16வது லீக் போட்டி ஷார்ஜாவில் நடைபெற்றது. இதில் கொல்கத்தா மற்றும் டெல்லி அணிகள் மோதின. டாஸ் வென்ற கொல்கத்தா பந்து வீச்சை தேர்வு செய்தது. டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக தவான், பிரித்வி ஷா களமிறங்கினர். இந்த ஜோடி அதிரடி துவக்கம் அளித்தது.

முதல் விக்கெட்டுக்கு 5.5 ஓவரில் 56 ரன்கள் குவித்தது. தவான் 16 பந்துகளில் 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஸ்ரேயாஸ் ஐயர் – ப்ரித்வி ஷாவுடன் இணைந்து ஆடினார். இந்த ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 73 ரன்கள் குவித்தது. பிரித்வி ஷா 66 ரன்னில் அவுட்டாக, அடுத்து வந்த ரிஷப் பண்ட் 38 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

38 பந்துகளில் 88 ரன்கள் குவித்த ஷ்ரேயாஸ் அய்யர் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 20 ஓவர் முடிவில், டெல்லி அணி 4 விக்கெட்டுக்கு 228 ரன்கள் என்ற மிரட்டலான ஸ்கோரை எட்டியது. 229 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் கொல்கத்தா அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் சுனில் நரேன் 3 ரன்னில் அவுட்டாகினார்.

ஷுப்மான் கில் 28 ரன்னிலும், ரசல் 13 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். 13 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுக்கு 117 ரன்கள் எடுத்திருந்த நிலையில், அடுத்து இறங்கிய மார்கன் – திரிபாதி ஜோடி 31 பந்தில் 78 ரன்கள் குவித்து அசத்தியது. இவர்களின் அற்புதமான ஆட்டத்தால் கொல்கத்தா அணி ஜெயித்து விடும் என்ற நம்பிக்கையை கொல்கத்தா அணி ரசிகர்களுக்கு இந்த இணை கொடுத்தது.

மார்கன் 44 ரன்னிலும், திரிபாதி 36 ரன்னிலும் ஆட்டமிழந்தார். இறுதியில் கொல்கத்தா அணி 8 விக்கெட் இழப்புக்கு 210 ரன்கள் எடுத்து. 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்கள் சரியான தொடக்கத்தை அமைத்துக் கொடுத்திருந்தால் நிச்சயம் முடிவு அவர்களுக்கு சாதகமாகவே இருந்திருக்கும்.


Share this:

Related posts

ராயல் சேலஞ்சர்ஸ் வெற்றிக்கு இதுதான் காரணமாம்… ஐபிஎல் 10வது ஆட்டத்தில் நடந்த அதிரடி

NEWSKADAI

ப்ளே ஆப் போகுமா சென்னை அணி? எதிர்பார்த்த ரசிகர்கள்- ஏமாற்றிய தோனி…

MANIMARAN M

“ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயிட்ரா”… 54 வயதில் அதிரடியாக கம்பேக் கொடுக்க போகும் மைக் டைசன்…!

NEWSKADAI

என்னா சேஸிங்…!!! அதிர்ந்துப் போன மும்பை… தெறிக்க விட்ட ராஜஸ்தான்…

MANIMARAN M

மிரள வைத்த மும்பை இந்தியன்ஸ்..!! அடுத்தடுத்து விக்கெட் இழந்த ராஜஸ்தான்..!!

MANIMARAN M

IPL கொண்டாட்டம் : “பாக்கத்தானே போறீங்க காளியோடு ஆட்டத்த, எடுடா வண்டிய… போடுடா விசில”… இம்ரான் தாஹிர் அதிரடி..

MANIMARAN M