Newskadai.com
விளையாட்டு

ப்ளே ஆப் போகுமா சென்னை அணி? எதிர்பார்த்த ரசிகர்கள்- ஏமாற்றிய தோனி…

Share this:

ஐபிஎல்(2020) தொடரின் 14வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. கடந்த இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்த சிஎஸ்கே, இந்தப் போட்டியில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்தது. சிஎஸ்கே அணியில் கேப்டன் தோனி அதிரடி மாற்றங்களை செய்து இருந்தார்.

முரளி விஜய், ருதுராஜ் கெயிக்வாட், ஜோஷ் ஹேசல்வுட் நீக்கப்பட்டிருந்தனர். அம்பதி ராயுடு, பிராவோ, ஷர்துல் தாக்குர் அணியில் சேர்க்கப்பட்டனர். சிஎஸ்கே அணி மொத்தமாக மாறி இருந்தது. தோனியின் ரசிகர்கள் மிகப்பெரிய வெற்றியை ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்தனர். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. வார்னர் – பேர்ஸ்டோ துவக்க வீரர்களாக களமிறங்கினர்.

முதலில் தடுமாறினாலும் பின்னர் நிதான ஆட்டம் ஆடிய ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்தது. வார்னர் 28 ரன்கள், மனிஷ் பாண்டே 29 ரன்கள், ப்ரியம் கார்க் 51*ரன்கள், அபிஷேக் சர்மா 31 ரன்கள் எடுத்தனர். 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்கியது. நிச்சயமாக இது மிகப் பெரிய ஸ்கோர் இல்லை தொட்டு விடக்கூடிய இலக்குதான் சென்னை அணி எளிதில் வெற்றி பெற்றுவிடும் என்று ரசிகர்கள் காத்திருந்தனர்.

சிஎஸ்ஐ அணியில் மேற்கொள்ளப்பட்டிருந்த மாற்றங்கள் இந்த நம்பிக்கைக்கு வலு சேர்த்தது.முரளி விஜய், ருதுராஜ் கெயிக்வாட், ஜோஷ் ஹேசல்வுட் நீக்கப்பட்டிருந்தனர். அம்பதி ராயுடு, பிராவோ, ஷர்துல் தாக்குர் அணியில் சேர்க்கப்பட்டிருந்தனர்.ஷேன் வாட்சன் மற்றும் டுபிளெசிஸ் துவக்க வீரர்களாக களமிறங்கினர். ஆரம்பமே அதிர்ச்சியாக இருந்தது ஷேன் வாட்சன் 1 ரன்னில் ஆட்டமிழந்தார்.

அடுத்து நம் நம்பிக்கை நட்சத்திரம் அம்பதி ராயுடு வந்தார். பாப் டுபிளெசிஸ் உடன் இணைந்து அவர் ஆடினார். என்ன கொடுமை அவரும் ஒற்றை இலக்க எண்களில் அவுட்டாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார். அதன்பின் வந்த அனைவரும் தொடர்ந்து அவுட் ஆவதிலேயே குறியாக இருந்தனர். டுபிளெசிஸ் மட்டும் வழக்கம்போல நின்று ஆடினார். ரசிகர்கள் தோனியின் மீது நம்பிக்கை வைத்து காத்திருந்தனர்.

தோனி ஜடேஜா ஜோடி அதிரடி காட்டாமல் பொறுமையாக விளையாடியது. ஜடேஜா 35 பந்துகளில் 50 ரன்கள் எடுத்தார். கடைசி 2 ஓவர்களில் 44 ரன்கள் தேவைப்பட்டது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு. அதை எடுக்கமுடியாமல் 7 ரன்கள் வித்தியாசத்தில் பரிதாபமாக தோற்றது நம் சென்னை அணி. கேப்டன் தோனியின் ஆட்டம் எரிச்சலை ஏற்படுத்தியதாக அவரது ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.


Share this:

Related posts

மிரள வைத்த மும்பை இந்தியன்ஸ்..!! அடுத்தடுத்து விக்கெட் இழந்த ராஜஸ்தான்..!!

MANIMARAN M

டெல்லி அணியின் பந்து வீச்சுக்கு பயந்து ஒடுங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ்…

MANIMARAN M

“தல தல தான்” புகழ்ந்து தள்ளிய சைமன்….

MANIMARAN M

நவ. 4-ல் மகளிர் T20 : கிரிக்கெட் ரசிகர்களுக்கு மற்றுமொரு விருந்து.. பிசிசிஐ அறிவிப்பு!

MANIMARAN M

வெறித்தனமாக ஆடிய சென்னை : மிரண்டுபோய்த் தோற்ற ஹைதராபாத்…

MANIMARAN M

#IPL : எகிறி அடித்த டில்லி – பதுங்கிப் பாய நினைத்து பயந்து தோற்ற ராஜஸ்தான்…

MANIMARAN M