Newskadai.com
விளையாட்டு

IPL : கடைசி 5 ஓவரில் சூறாவளியாய் சுழன்ற மும்பை – காணாமல் போன பஞ்சாப்

Share this:

ஐபிஎல்(2020) தொடரின் 13வது லீக் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் நிதான ஆட்டம் ஆடினாலும் கடைசி 5 ஓவர்கள் திட்டமிட்டு வெறியாட்டம் ஆடியது.

ரோஹித் சர்மா, பொல்லார்டு, ஹர்திக் பாண்டியா என மூன்று அதிரடி வீரர்கள் பஞ்சாப் பந்துவீச்சை பிளந்து கட்டினர்.இஷான் கிஷன் 32 பந்துகளில் 28 ரன்கள், ரோஹித் சர்மா 45 பந்துகளில் 70 ரன்கள், பொல்லார்டு 20 பந்துகளில் 47 ரன்கள், பாண்டியா 11 பந்துகளில் 30 ரன்கள் எடுத்தனர்.

20 ஓவர்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 4 விக்கெட் இழந்து 191 ரன்கள் எடுத்தது. 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களத்தில் இறங்கியது பஞ்சாப் அணி. பஞ்சாப் அணியின் பேட்டிங் ஆரம்பம் முதலே செம சொதப்பலாக இருந்து வந்தது அந்த அணி 60 ரன்களுக்குள் 3 விக்கெட்களை இழந்தது.

இக்கட்டான சூழ்நிலையில் பஞ்சாப் அணியின் கேப்டன் வெறும் 17 ரன்கள் மட்டுமே எடுத்தார். பஞ்சாப் அணி வீரர்கள் அவுட் ஆவதிலேயே ஆர்வம் காட்டியது போல் விளையாடினார்கள். நிக்கோலஸ் பூரான் மட்டும் 44 ரன்கள் எடுத்தார்.

இதனால் 20 ஓவர் முடிவில் பஞ்சாப் அணி 143 ரன்கள் மட்டுமே எடுத்தது. மும்பை இந்தியன்ஸ் 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


Share this:

Related posts

குஷியான செய்தி: லாக்டவுனை தவிடு பொடியாக்கிய ஐபிஎல்… செப்டம்பரில் போட்டிகள் தொடக்கம்!!

NEWSKADAI

என்னா சேஸிங்…!!! அதிர்ந்துப் போன மும்பை… தெறிக்க விட்ட ராஜஸ்தான்…

MANIMARAN M

பேட்டிங்கை தேர்வு செய்த ஹைதராபாத்..!! பவுலிங்கில் மிரட்டிய கொல்கத்தா..!! முதல் வெற்றியை பதிவு செய்த அணி…

MANIMARAN M

ஒரு பந்தில் ஒரு ரன்…!!! தெறிக்கவிட்ட சிஎஸ்கே… கனவு கலைந்த கொல்கத்தா…

MANIMARAN M

விளையாட்டுத்துறையில் விஸ்வரூபம் எடுக்கும் கொரோனா… பிரபல கால் பந்தாட்ட வீரருக்கு தொற்று உறுதி…!

NEWSKADAI

ஹர்திக் பாண்டியாவிற்கு குழந்தை பிறந்தாச்சு… புகைப்படத்துடன் வெளியான அசத்தல் தகவல்…!!

AMARA