Newskadai.com
விளையாட்டு

IPL : கொட்டாவி விட்ட ராஜஸ்தான் சிங்கங்கள் கட்டிப்போட்ட கொல்கத்தா வீரர்கள்

Share this:

ஐபிஎல் தொடரின் 12வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பந்துவீச்சை தேர்வு செய்தார். இந்த இரு அணிகளும் அதன் முந்தைய போட்டிகளில் வெற்றி பெற்று இருந்ததால் இரண்டு அணியிலும் எந்த மாற்றமும் இல்லை. முதலில் பேட்டிங்கில் இறங்கிய கொல்கத்தா அணியில் ஷுப்மன் கில் அணிக்கு நல்ல துவக்கம் அளித்தார்.

சுனில் நரைன் 15 ரன்கள், ராணா 22 ரன்கள், ஆண்ட்ரே ரஸ்ஸல் 24 ரன்கள் எடுத்தனர். கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் 1 ரன்னில் ஆட்டமிழந்தார். கம்மின்ஸ் 12 ரன்கள் சேர்த்தார். கடைசி வரை நின்ற இயான் மார்கன் 23 பந்துகளில் 34 ரன்கள் சேர்த்தார். ராஜஸ்தான் பவுலர் ஜோப்ரா ஆர்ச்சர் துல்லியமாக பந்து வீசினார். 4 ஓவர்களில் 18 ரன்கள் கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தினார்.

கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் குவித்தது. 175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணிக்கு துவக்கமே சோதனையாக அமைந்தது. துவக்க வீரராக இறங்கிய ஸ்டீவ் ஸ்மித் 3 ரன்னில் ஆட்டமிழந்தார். அதன்பின் வந்த அனைத்து வீரர்களும் கொரோனாவுக்கு பயந்து ஓடுவது போல் மைதானத்தை விட்டு ஓடுவதிலேயே குறியாக இருந்தது போல் இருந்தது அவர்கள் ஆட்டம்.

பஞ்சாப் அணிக்கு எதிராக 223 ரன்கள் என்ற மிகப்பெரிய இலக்கை சேஸிங் செய்து வெற்றி பெற்ற அணியா இது? என்ற எண்ணம் அனைத்து ரசிகர்களுக்கும் தோன்றியது. மிடில் ஆர்டர், பின் வரிசை என அனைத்து வீரர்களும் கை விட்டனர். டாம் கர்ரன் மட்டுமே போராடி 36 பந்துகளில் 54 ரன்கள் எடுத்தார். ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 137 ரன்கள் மட்டுமே எடுத்தது.

37 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. இது அந்த அணியின் இரண்டாவது வெற்றி ஆகும். சஞ்சு சாம்சன், பட்லர் என இரண்டு முக்கிய விக்கெட்களை சாய்த்த சிவம் மாவி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.


Share this:

Related posts

சீனப் பகையால் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு ஏற்பட்ட பல கோடி இழப்பு

MANIMARAN M

IPL கொண்டாட்டம் : “பாக்கத்தானே போறீங்க காளியோடு ஆட்டத்த, எடுடா வண்டிய… போடுடா விசில”… இம்ரான் தாஹிர் அதிரடி..

MANIMARAN M

எல்லாம் இருந்தும் வெற்றியை கோட்டை விட்ட டெல்லி கேபிடல்ஸ் அணி

MANIMARAN M

#IPL : எகிறி அடித்த டில்லி – பதுங்கிப் பாய நினைத்து பயந்து தோற்ற ராஜஸ்தான்…

MANIMARAN M

கொல்கத்தா அணியை துவம்சம் செய்த பெங்களூர் அணியின் பந்து வீச்சு

MANIMARAN M

ப்ளே ஆப் போகுமா சென்னை அணி? எதிர்பார்த்த ரசிகர்கள்- ஏமாற்றிய தோனி…

MANIMARAN M