Newskadai.com
விளையாட்டு

டெல்லி அணியின் தொடர் வெற்றியை தடுத்து நிறுத்திய வார்னரின் கேப்டன்ஷிப்…

Share this:

2020 ஐபிஎல் தொடரின் லீக் சுற்றின் 11 வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, டெல்லி கேபிடல்ஸ் அணியை சந்தித்தது. இந்தப் போட்டிக்கு முன் டெல்லி அணி தான் ஆடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று இருந்தது. ஹைதராபாத் அணி தான் ஆடிய இரண்டு போட்டிகளிலும் தோல்வியடைந்து இருந்தது.

புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கும் ஹைதராபாத் அணி இந்தப் போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருந்தது. டாஸ் ஜெயித்த டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய ஹைதரபாத் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்தது.

வார்னர் 45, பேர்ஸ்டோ 53, கேன் வில்லியம்சன் 41 ரன்கள் எடுத்தனர். கேன் வில்லியம்சனின் நிதானமான உறுதியான ஆட்டத்தால் 162 ரன்கள் என்ற கௌரவமான இலக்கை ஹைதராபாத் அணி பெற்றது. 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடத் தொடங்கிய டெல்லி அணி ஹைதராபாத் பந்துவீச்சாளர்களின் நேர்த்தியான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் ஆரம்பம் முதலே தடுமாறியது.

அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் முதல் அனைத்து முன்னணி பேட்ஸ்மேன்களும் ரன் குவிக்க முடியாமல் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். ஷிகர் தவான் 34, ஸ்ரேயாஸ் அய்யர் 17, ரிஷப் பந்த் 28, ஷிம்ரான் ஹெட்மையர் 21 ரன்கள் எடுத்தனர்.

இறுதியில் டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஹைதராபாத் அணி இந்த ஐபிஎல் தொடரில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.


Share this:

Related posts

IPL : கொட்டாவி விட்ட ராஜஸ்தான் சிங்கங்கள் கட்டிப்போட்ட கொல்கத்தா வீரர்கள்

MANIMARAN M

தொடர்ச்சியாக 5வது வெற்றி… பதற வைத்த பஞ்சாப்….!! திணறிப் போன கொல்கத்தா….!!

MANIMARAN M

2020 IPL கொண்டாட்டம் : போட்டி அட்டவணை வெளியீடு…

MANIMARAN M

ஆடவும் இல்லை..!! ஓடவும் இல்லை..!! 100 தொடாத கொல்கத்தா… அசால்டாய் வென்ற பெங்களூரு…

MANIMARAN M

திக்..திக்..திக்.. தேவை ஒரு பந்தில் ஒரு ரன்… அடித்து நொறுக்கிய பஞ்சாப்… அசந்து போன பெங்களூர்…

MANIMARAN M

IPL கொண்டாட்டம் : “பாக்கத்தானே போறீங்க காளியோடு ஆட்டத்த, எடுடா வண்டிய… போடுடா விசில”… இம்ரான் தாஹிர் அதிரடி..

MANIMARAN M