Newskadai.com
விளையாட்டு

பேட்டிங்கை தேர்வு செய்த ஹைதராபாத்..!! பவுலிங்கில் மிரட்டிய கொல்கத்தா..!! முதல் வெற்றியை பதிவு செய்த அணி…

Share this:

ஐ.பி.எல். கிரிக்கெட் : நேற்றைய ஆட்டத்தில் ஐதராபாத் அணி மற்றும் கொல்கத்தா அணி மோதின. இரண்டு அணிகளுமே இதுவரை நடந்த போட்டிகளில் வெற்றி பெறாததால் இந்த போட்டி இரண்டு அணிகளுக்குமே முக்கிய போட்டியாக இருந்தது. டாஸ் வென்ற ஐதராபாத் அணியின் கேப்டன் வார்னர் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதுவரை நடந்த அனைத்து போட்டிகளிலும் டாஸ் ஜெயித்த அணிகள் பெரும்பாலும் பந்துவீச்சையே தேர்வு செய்திருந்தனர்.

ஆடுகளத்தின் தன்மை காரணமாக இரண்டாவது பேட்டிங் செய்வது வெற்றிகரமானதாக இருக்கும் என்று கருதினர். ஆனால் இதுவரை முடிவுகள் வேறு விதமாகத்தான் இருந்து வருகிறது. இரண்டாவது பேட்டிங் செய்த அணி பெரும்பாலும் தோல்வியையே தழுவியுள்ளனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இரண்டு தோல்விகளும் இதில் அடங்கும். இந்நிலையில் ஹைதராபாத் அணி கேப்டன் வார்னர் அதிரடியாக பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார்.

முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணியின் கேப்டன் வார்னர் 36 ரன்கள், மணீஷ் பாண்டே 51 ரன்கள், சஹா 30 ரன்கள் சேர்க்க, 20 ஓவர்கள் முடிவில் ஐதராபாத் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 142 ரன்கள் மட்டுமே சேர்த்தது. கொல்கத்தா அணி தரப்பில் கம்மின்ஸ், சக்கரவர்த்தி, ரஸல் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை எடுத்தனர். கொல்கத்தா அணி கேப்டன் தினேஷ் கார்த்தி எதிரணி ரன் குவிப்பதை முதல் ஓவரில் இருந்து கட்டுப்படுத்தினார்.

நேற்றைய ஆட்டத்தில் கொல்கத்தா அணி பவுலர்களின் பந்துவீச்சு சிறப்பாக இருந்ததால் ஐதராபாத் அணி குறைவான ரன்களுக்குள் முடங்கிப் போனது. 143 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடத் தொடங்கிய கொல்கத்தா அணிக்கு அதன் தொடக்க ஆட்டக்காரர் ஷுப்மன் கில் பலமான அஸ்திவாரத்தை அமைத்து அதிரடி காட்டாமல் நிதானமாக ஆடி நிலைத்து நின்று ஆடினார். நரேன், கேப்டன் தினேஷ் கார்த்திக் ஏமாற்றம் அளித்தாலும், கில்லுடன் ராணா, மோர்கன் ஆகியோர் இணைந்து அணியை வெற்றிப் பாதையில் அழைத்து சென்றனர்.

ராணா 26 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனால், ஷுப்மன் கில் 70 ரன்கள், மோர்கன் 42 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். இறுதியில் 18 ஓவர்களில் கொல்கத்தா அணி தங்களது இலக்கை எட்டி வெற்றி வாகை சூடியது. கொல்கத்தா அணி இந்த சீசனில் பெரும் முதல் வெற்றி இது என்பது குறிப்பிடத்தக்கது.


Share this:

Related posts

“தல” தோனி திடீர் ஓய்வை அறிவிக்க காரணம் இவர்களா?… பரபரப்பு பின்னணி…!!

MANIMARAN M

IPL : கொட்டாவி விட்ட ராஜஸ்தான் சிங்கங்கள் கட்டிப்போட்ட கொல்கத்தா வீரர்கள்

MANIMARAN M

அதிரிபுதிரி IPL ஆரம்பம்… சென்னையுடன் மோதும் மும்பை…

MANIMARAN M

எல்லாம் இருந்தும் வெற்றியை கோட்டை விட்ட டெல்லி கேபிடல்ஸ் அணி

MANIMARAN M

2020 IPL கொண்டாட்டம் : போட்டி அட்டவணை வெளியீடு…

MANIMARAN M

ராஜஸ்தான் ராயல்ஸ் இடம் போராடி தோற்ற சென்னை சூப்பர் கிங்ஸ்

MANIMARAN M