Newskadai.com
விளையாட்டு

#IPL : எகிறி அடித்த டில்லி – பதுங்கிப் பாய நினைத்து பயந்து தோற்ற ராஜஸ்தான்…

Share this:

ஐபிஎல்(2020) தொடரின் 23வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி அணிகள் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. ஷார்ஜா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், முதலில் களமிறங்கிய டெல்லி அணியின் பிரித்வி ஷா, தவான் இருவரும் ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தனர்.

தவான் 5 ரன்களிலும் பிரித்வி 19 ரன்களிலும் அவுட் ஆனார்கள். கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் அதிரடி காட்டி விளையாடினார். 22 ரன்கள் எடுத்த நிலையில் துரதிர்ஷ்டவசமாக ரன் அவுட்டாகி பெவிலியன் திரும்பினர். 79 ரன்னுக்கு 4 முக்கிய விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய டெல்லி அணியை மார்கஸ் ஸ்டாய்னிஸ் வெற்றிப் பாதைக்கு திரும்பினார். ஹெட்மயர் சிக்சர்களாகப் பறக்க விட்டார்.

இந்த இருவரது ஆட்டத்தால் டெல்லி அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. மார்கஸ் ஸ்டாய்னிஸ் 39 ரன்கள். ஹெட்மயர் 24 பந்துகளில் 45 ரன்கள் எடுத்தனர். 20 ஓவர் முடிவில் டெல்லி அணி 8 விக்கெட் இழப்புக்கு 184 ரன் குவித்தது. ஷார்ஜா ஆடுகளம் சிறியது என்பதால் 200 ரன்களுக்கு மேல் போகும் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில் டெல்லி அணியின் மிரட்டும் பேட்டிங் ஆர்டரை ராஜஸ்தான் பந்துவீச்சு சிறப்பாக கட்டுப்படுத்தியது.

ராஜஸ்தான் பந்துவீச்சில் ஆர்ச்சர் 4 ஓவரில் 24 ரன் மட்டுமே விட்டுக் கொடுத்து 3 விக்கெட் கைப்பற்றினார். கார்த்திக் தியாகி, ஆண்ட்ரூ டை, திவாதியா தலா 1 விக்கெட் வீழ்த்தினர். 185 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணியின் துவக்க வீரர்களாக யாஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர் இணை களம் இறங்கியது. பட்லர் 13 ரன்களில் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார்.

ராஜஸ்தான் பவுலர்கள் டெல்லி அணியை கட்டுப்படுத்தினார்கள் என்றால் டெல்லி அணி பவுலர்கள் ராஜஸ்தான் அணியை பந்துவீச்சால் மிரட்டினார்கள் என்று சொல்லலாம். ஸ்டீவன் ஸ்மித், ராகுல் திவாடியா இருவரைத் தவிர மற்ற அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

ஸ்டீவன் ஸ்மித் 24 ரன்கள், ராகுல் திவாடியா 38 ரன்கள் எடுத்தனர். 19.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த ராஜஸ்தான் அணி 138 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், டெல்லி அணி 46 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது.


Share this:

Related posts

13 வது ஐ.பி.எல் தொடர் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று துவங்குகிறது…

MANIMARAN M

சிஎஸ்கே அணியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மற்றொரு வீரர் இவர் தான்… அடுத்தடுத்து விழும் பலத்த அடி…!!

AMARA

ஓய்வை அறிவித்தார் “தல” தோனி… உற்சாகம் இழந்த கிரிக்கெட் ரசிகர்கள்…!!

AMARA

ரெய்னா குடும்பத்தில் அரங்கேறிய துயர சம்பவம்… IPL-லிருந்து விலகியது இதற்காக தானாம்…!

MANIMARAN M

IPL : கடைசி 5 ஓவரில் சூறாவளியாய் சுழன்ற மும்பை – காணாமல் போன பஞ்சாப்

MANIMARAN M

கொல்கத்தா அணியை துவம்சம் செய்த பெங்களூர் அணியின் பந்து வீச்சு

MANIMARAN M