Newskadai.com
விளையாட்டு

ஐபிஎல் 2020 : நூலிழையில் வெற்றியை தவறவிட்ட கிங்ஸ் 11 பஞ்சாப் அணி…

Share this:

ஐபிஎல் தொடரின் இரண்டாவது ஆட்டம் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கும், டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கும் இடையே நேற்று நடைபெற்றது. டாஸ் ஜெயித்த பஞ்சாப் அணி டெல்லியை பேட்டிங் செய்ய அழைத்தது ” தல” தோனியின் பாணியில். முதலில் பேட் செய்த டெல்லி அணி 17 ஓவர்களில் 100 ரன்கள் மட்டுமே எடுத்து தள்ளாடியது.

பஞ்சாப் அணியின் பவுலர்கள் ஆட்டத்தை தங்கள் கட்டுக்குள் வைத்திருந்தனர். கிரிக்கெட் வல்லுநர்கள் டெல்லி அணி 120 ரன்கள் எடுப்பதே சந்தேகம் என்று கணித்தனர். இவர்களின் கணிப்புகளை தவிடுபொடி ஆக்கினார் டெல்லி அணியின் மார்கஸ் ஸ்டயினிஷ். கடைசி 3 ஓவர்களில் பஞ்சாப் பவுலர்களை தெறிக்க விட்டார் 21 பந்துகளில் 53 ரன்கள் எடுத்து தனது அணியினை 157 ரன்கள் என்ற வலுவான நிலைக்கு கொண்டு சென்றார்.

158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி அதிரடியாக விளையாடியது. அனைவரும் பஞ்சாப் அணி வெற்றி பெற்றுவிடும் என்று கருதினர். ஆனால் கடைசி ஓவரை வீசிய மார்கஸ் ஸ்டயினிஷ் பஞ்சாப் அணியின் வெற்றியை கண்ணிமைக்கும் நேரத்தில் பறித்தார். இறுதியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 8 விக்கெட் இடத்திற்கு 157 ரன்கள் மட்டுமே எடுத்ததால் ஆட்டம் டிரா ஆனது.

வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும் சூப்பர் ஓவர் கொண்டுவரப்பட்டது. சூப்பர் ஓவரில் சொதப்பிய பஞ்சாப் அணி 2 ரன்கள் மட்டுமே எடுத்தது. வெறும் 3 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர், ரிஷப் பந்த் ஜோடி எளிதாக இலக்கை எட்டிப்பிடித்து தங்களது அணியை வெற்றி பெறச் செய்தனர்.

பவுலிங் பேட்டிங் இரண்டிலும் பட்டையை கிளப்பிய டெல்லி அணியின் மார்கஸ் ஸ்டயினிஷ் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.


Share this:

Related posts

இந்திய அணியின் முன்னாள் கேப்டனுக்கு மாரடைப்பு… ரசிகர்கள் பதற்றம்…!!!

MANIMARAN M

எல்லாம் இருந்தும் வெற்றியை கோட்டை விட்ட டெல்லி கேபிடல்ஸ் அணி

MANIMARAN M

பேட்டிங்கில் திணறிய பெங்களூரு…. வச்சு செஞ்சு பழித் தீர்த்த மும்பை…!!!

MANIMARAN M

”ஓடவும் மாட்டேன் ஒளியவும் மாட்டேன்”… கடினமான சூழலையும் கச்சிதமாக அணுகும் தோனி ஆவேசம்..!!

NEWSKADAI

சூப்பர் ஓவரும் டை : தெறிக்கவிட்ட பஞ்சாப்… வெற்றி விளிம்பில் சறுக்கிய மும்பை…

MANIMARAN M

தோல்வியிலும் வரலாற்று சாதனை செய்த சிஎஸ்கே..!!

NEWSKADAI